பழைய ஆளுங்க மாதிரி அதிகார மமதையில சுத்தவோ, கஜனாவை கொள்ளையடிச்சு சொகுசு பார்க்கவோ நாம இங்க வரல! திமுக, அதிமுக பண்ண சுயநல அரசியலாலதான் ஜனங்க அவங்களை தூக்கி போட்டு நம்மகிட்ட இந்த அரியணையை குடுத்திருக்காங்க. அவங்க பண்ண தப்பை இங்க யாராச்சும் ரிப்பீட் பண்ணா… அடுத்த நிமிஷம் சீட் காலி ஆகிடும்! உளவுத்துறை கண்ணுல இருந்து தப்பிக்கலாம், ஆனா இந்த விஜய்யோட கண்ணில் இருந்து யாரும் தப்ப முடியாது! அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் டோஸ் விட்டாரா முதல்வர் விஜய்?

 

தமிழக அரசியல் வரலாற்றில் எத்தனையோ ஆட்சி மாற்றங்களையும் பல்வேறு முதலமைச்சர்களின் நிர்வாகப் பாணிகளையும் மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கி, களம் கண்ட முதல் தேர்தலிலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, தற்போது 50 நாட்களை நிறைவு செய்துள்ள முதலமைச்சர் விஜய்யின் அதிரடி நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. புதிய அரசு பதவியேற்ற குறுகிய காலத்திலேயே நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள தவெக தலைமை எடுத்த ரகசியக் கருத்துக்கணிப்பு அறிக்கை, கோட்டையையே ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது. இந்த 50 நாள் ஆட்சிக் ரிப்போர்ட், மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்திருந்தாலும், சில இடங்களில் இன்னும் சரி செய்ய வேண்டிய ஓட்டைகள் இருப்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கள நிலவரத்தை ஆராய்ந்து தவெக தலைமை எடுத்த இந்த உள்வட்டார ரிப்போர்ட்டில், இன்னும் சில மாவட்டங்களில் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் மக்கள் பணிகளில் போதிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதிகாரிகள் மட்டத்தில் சுணக்கம் இருப்பதையும், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் சில இடங்களில் இன்னும் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. தனக்குக் கிடைத்த உளவுத்துறை மற்றும் கட்சியின் சொந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளைக் கண்டு முதலமைச்சர் விஜய் கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. மக்கள் கொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியை ஒருபோதும் வீணடித்துவிடக் கூடாது என்பதில் அவர் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதைத் தொடர்ந்து அவர் எடுத்த நடவடிக்கைகள் உணர்த்தின.

ரிப்போர்ட் கையில் கிடைத்த அடுத்த கணமே, சுணக்கமாகச் செயல்படுவதாகக் கண்டறியப்பட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளைத் தலைமைச் செயலகத்திற்கு அவசரமாக வரவழைத்தார் முதலமைச்சர் விஜய். யாரும் எதிர்பாராத வகையில், அந்த மூடிய அறை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை நேருக்கு நேர் உட்கார வைத்து, அவர்களின் அலட்சியப் போக்கு குறித்து மிகக் கடுமையான வார்த்தைகளால் வெளுத்து வாங்கி, டோஸ் விட்டதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “நாம் ஆட்சிக்கு வந்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட முழுமையாக முடியவில்லை, அதற்குள் மக்கள் பணிகளில் இவ்வளவு சுணக்கமா?” என்று அவர் கேட்ட கேள்விகள், கூட்டத்தில் இருந்தவர்களைத் தலைகுனிய வைத்ததாகக் கூறப்படுகிறது. மக்கள் சேவையில் எள்ளளவும் அலட்சியம் காட்டுவதை எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ள முடியாது என்று அவர் மிகத் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கிய முதல்வர் விஜய், “நாம் காலம் காலமாகத் தமிழ்நாட்டை ஆண்டு வந்த திமுக, அதிமுக போன்ற பாரம்பரியக் கட்சிகளைப் போல சுயநலமாகச் செயல்படக் கூடாது” என்பதை மிக ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார். அவர்கள் செய்த தவறுகளினாலும், அதிகார மமதையினாலும் தான் மக்கள் அவர்களுக்குப் பாடம் புகட்டி, நம்மை இந்த அரியணையில் உட்கார வைத்த வைத்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்று நினைவூட்டியுள்ளார். நாம் இங்கு வந்து சொகுசாக வாழ்வதற்கோ அல்லது அதிகாரத்தை அனுபவிப்பதற்கோ பதவிக்கு வரவில்லை, பல தசாப்தங்களாகத் துயரப்படும் மக்களுக்குத் தூய்மையான, நேர்மையான நல்லது செய்வதற்காக மட்டுமே வந்திருக்கிறோம் என்ற உண்மையை அவர் தன் அமைச்சரவைக்கு மிக ஆழமாகப் புரிய வைத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசாங்கத்தின் தரப்பிலிருந்து மக்கள் முன்னிலையில் தோன்றும் எந்தவொரு சிறு தவறையும், முறைகேட்டையும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று கறாராகக் கட்டளையிட்டுள்ளார். அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் களத்திற்குச் சென்று மக்களின் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்றும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை எவ்வித இழுபறியும் இன்றி உடனே செய்து முடிக்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கோப்புகள் அமைச்சர்களின் மேஜையில் தேங்கிக் கிடந்தால், அதற்குச் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரே முழுப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்ற அவரது கண்டிப்பு, அதிகார வர்க்கத்தையும் மக்கள் பிரதிநிதிகளையும் தற்போதைய களப்பணிகளில் அதிவேகமாகச் சுழல வைத்துள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் இந்த 50 நாள் அதிரடி ஆட்டத்தையும், தன் கட்சி ஆட்களையே தட்டிக்கேட்கும் அவரது நேர்மையான பாணியையும் பார்த்துவிட்டு, “இப்படி ஒரு முதலமைச்சரை இதுவரை தமிழ்நாடு பார்த்ததே இல்லை” என்று பொதுமக்கள் பரவலாகப் பேசத் தொடங்கியுள்ளனர். தன் சொந்த லாபத்தையோ, கட்சியின் சுயநலத்தையோ பார்க்காமல், முழுக்க முழுக்க மக்கள் நலன் மட்டுமே தனது ஒற்றைக் குறிக்கோள் எனச் செயல்படும் ஒரு தலைவரை, மறைந்த மாபெரும் தலைவர் காமராஜருக்குப் பிறகு மக்கள் இப்போதுதான் பார்க்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். காமராஜரின் நேர்மையான, எளிய நிர்வாகப் பாணியை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ள முதலமைச்சர் விஜய்யின் இந்த வேகம், தமிழக அரசியலில் ஒரு தூய்மையான மற்றும் பொற்கால ஆட்சிக்கான அஸ்திவாரமாக மாறியுள்ளது என்பதில் ஐயமில்லை.

Leave a Comment