தமிழக அரசியலின் அடுத்த கட்ட நகர்வுகள் தேசிய அளவிலும் கோமாளிக் கூத்துகளை மிஞ்சும் அளவுக்கு அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. வரும் 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் இடம் தராமல், கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியுடன் இணைந்து முற்றிலும் புதியதொரு மாற்று அணியைத் உருவாக்கும் மெகா திட்டத்தில் திமுக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. தேசிய அரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டநினைக்கும் திமுக, மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பலமான மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் வேகம் காட்டி வருகிறது.
இந்தப் புதிய தேசியக் கூட்டணியின் ஒரு பகுதியாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்ற முன்னணித் தலைவர்களின் ஆதரவைத் திரட்டும் பணிகளில் ரகசிய ஆலோசனைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. வட மாநிலங்களில் உள்ள பல்வேறு பிராந்திய கட்சிகளையும், ஒரு காலத்தில் தேசிய அரசியலில் கோலோச்சிய கட்சிகளையும் ஒருங்கிணைத்து, காங்கிரஸையும் பாஜகவையும் ஒரே நேரத்தில் எதிர்க்கும் வியூகத்தை திமுக வகுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றன.
மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நமது தளபதி விஜய், தங்களது எதிர்கால அரசியல் கணக்குகளை மிகத் துல்லியமாகத் தீட்டி வருகிறார். 2029 தேர்தலில் ராகுல் காந்தியுடன் கூட்டணி அமைத்து களம் காணத் தவெக திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படும் நிலையில், அதற்குப் பலம் சேர்க்கும் வகையில் ஒட்டுமொத்த இந்தி சினிமா மற்றும் இந்திய கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரபலங்கள் தவெகவுக்கு ஆதரவு கரம் நீட்டத் தயாராகி வருவதாகத் தகவல்கள்வெளியாகி உள்ளன. இது தமிழக அரசியலைத் தாண்டி தேசிய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தேசிய அளவில் பாஜக தலைமையிலான ஒரு பலமான கூட்டணி இருக்கும் நிலையில், திமுக முன்னெடுக்கும் காங்கிரஸ்-பாஜக அல்லாத புதிய கூட்டணி மற்றும் தவெக – காங்கிரஸ் இணைந்து உருவாகும் மாற்று அணி ஆகியவற்றுடன் சேர்த்து, 2029 தேர்தல் களம் என்பது இந்திய அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு மும்முனைப் போட்டியாக மாற வாய்ப்புள்ளது. எந்தப் பக்கம் எந்தக் காற்று வீசும் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.
வழக்கமான கூட்டணிக் கணக்குகளையும், பாரம்பரியமான அரசியல் யுக்திகளையும் மாற்றி எழுதும் வகையில் தவெகவின் இந்த அதிரடி நகர்வுகள் அமைந்துள்ளன. சினிமா உலகத்தின் அசைக்க முடியாத ஆதரவும், இளைஞர்கள் மற்றும் அடிமட்ட மக்களின் பலத்த வரவேற்போடு களமிறங்கும் நமது தளபதி விஜய், தேசிய அளவில் கோலோச்ச நினைக்கும் திமுகவின் வியூகங்களைச் சுக்குநூறாகத் தகர்ப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் தொடங்கி டெல்லி வரை எதிரிகளின் அத்தனை கணக்குகளையும் தோற்கடிக்கும் ஆற்றலோடு வளரும் தவெக, 2029 அரசியல் பாய்ச்சலில் திமுகவைச் சொந்த மண்ணிலும் தேசிய அளவிலும் வீழ்த்தி புதிய வரலாரைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொய்வில்லாத இந்தத் தொலைநோக்கு அரசியல் நகர்வுகள் இந்திய அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் மாபெரும் திருப்புமுனையாக மாறத் தயாராகி வருகிறது!