அரசியல்வாதியா இருந்தாலும் சரி, பத்திரிகையாளராக இருந்தாலும் சரி.. பெண்களை தப்பா பேசினா அரெஸ்ட் தான்.. பெண்களை கொச்சையாக பேசினால் வேடிக்கை பார்க்கும் திராவிட மாடல் அரசு அல்ல இது.. கொத்து புரோட்டா போட்டு கும்மியடுக்கும் தவெக அரசு..

அரசியல்வாதியா இருந்தாலும் சரி, பத்திரிகையாளராக இருந்தாலும் சரி.. பெண்களை தப்பா பேசினா அரெஸ்ட் தான்.. பெண்களை கொச்சையாக பேசினால் வேடிக்கை பார்க்கும் திராவிட மாடல் அரசு அல்ல இது.. கொத்து புரோட்டா போட்டு கும்மியடுக்கும் தவெக அரசு.. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஷ்டத்துக்கு பேசினால் இனி ஜெயில்தான்.. வாய் இருக்குங்கிறதுக்காக எதுவேனா பேசுவ, பார்த்துகிட்டு சும்மா இருக்கனுமா? யாகாரவாயினும் நாகாக்கா, இல்லையேல் புழல் உறுதி…

சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாலதி (38). இவர் ‘சவுக்கு மீடியா’ என்ற யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜனவரி 2026 மாதத்தில் ‘கிங் 24 X 7’ என்ற யூடியூப் சேனலில், மாலதி குறித்து அவதூறான மற்றும் அருவருக்கத்தக்க வகையிலான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வார பத்திரிகையின் நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு நெறியாளர் இணைந்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். ‘HIV சவுக்கு மாதியும் கல்யாணம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், மாலதியின் புகைப்படத்தைக் காண்பித்து அவருக்கு எச்.ஐ.வி உள்ளதாகவும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் முற்றிலும் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.

பெண்மையை அவமதிக்கும் வகையிலும், நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் வெளியான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மனவேதனை அடைந்த தொகுப்பாளினி மாலதி, இதுகுறித்து S-8 ஆலந்தூர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.

மாலதியின் புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் , தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக ஆலந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணையை முன்னெடுத்தனர்.

மேற்கண்ட வழக்கில் தொடர்புடைய சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த தாமோதரன் பிரகாஷ் என்பவரை காவல்துறையினர் இன்று அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் இதுகுறித்து தீவிரமான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களையும் யூடியூப் சேனல்களையும் பயன்படுத்திப் பெண்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்போர் மீதான இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் இணையதளத்தில் தவறான தகவல்களைப் பரப்பும் நபர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இந்தச் சம்பவம் மீடியா மற்றும் சமூக வலைதள வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment