எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை… இன்று ஒரே நாளில் விஜய் மற்றும் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள்.. முதல்வர் விஜய்யால் மகளிர் வெற்றி பயண திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.. அடுத்தது காந்தி ஜெயந்தி திருவிழா.. அதனை அடுத்து மதுராந்தகம் ரோடு ஷோ.. விஜய் மகன் சஞ்ஜய் – முதல் படம் சிக்மா இன்று ரிலீஸ்.. தாயார் சங்கீதா, தங்கை திவ்யா சஞ்சய் உடன் படம் பார்க்கும் ஜேசன் சஞ்சய்.. குடும்பமே குதூகுலமாக இருக்கும் நாள்…
அக்டோபர் 2, 2026 – தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் குடும்பத்திலும், அவரது அரசியல் பயணத்திலும் ஒரே நாளில் நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளால் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நாளாக மாறியுள்ளது. ஒருபுறம் அரசுப் பணிகளில் தீவிரம், மறுபுறம் திரையுலகில் மகனின் புதிய தொடக்கம் என ஒரே நாளில் எல்லாக் களங்களிலும் சாதித்துக் காட்டும் ஒரு அபூர்வமான நிகழ்வை தமிழ்நாடு இன்று கண்டுள்ளது.
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை தான்” என்னும் புகழ்பெற்ற வரிகளுக்கு ஏற்ப, முதலமைச்சர் விஜய் பெண்களின் வாழ்வாதாரத்தையும் பயணத்தையும் எளிதாக்கும் ‘வெற்றி பயணம்’ திட்டத்தை இன்று முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் வசதியை மேலும் விரிவுபடுத்தியதோடு, தாமே பேருந்தில் ஏறி கண்டக்டராக மாறி பயணிகளுக்கு இலவச பயணச்சீட்டுகளையும் வழங்கி மக்களின் மனங்களைக் வென்றுள்ளார்.
அரசுத் திட்டத் தொடக்க விழாவை நிறைவு செய்த கையோடு, முதலமைச்சர் விஜய் மதுராந்தகத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு பிரம்மாண்ட ரோடு ஷோ பயணத்தை மேற்கொள்கிறார். கிராமப்புற மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வுகாணும் நோக்கில், ஒரே நாளில் 35-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று சாமானிய மக்களுடன் கலந்துரையாடி தனது மக்கள் சேவையைத் தொடர்ந்து வருகிறார்.
அதே வேளையில், முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெகுவிமர்சையாக வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடத் தொடங்கியுள்ளது.
இயக்குநராக அவதாரமெடுத்துள்ள ஜேசன் சஞ்சய்யின் முதல் திரைப்படத்தைக் காண்பதற்காக, அவரது தாயார் சங்கீதா மற்றும் சகோதரி திவ்யா விஜய் ஆகியோர் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கிற்கு ஒன்றாக வந்து முதல் காட்சியைக் கண்டு ரசித்துள்ளனர். மகனின் முதல் கலைப் படைப்பைத் திரையில் கண்டு குடும்பத்தினர் அடைந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சொந்த மகனின் திரைப்படம் ரிலீஸாகும் நாளில்கூடத் தனது தனிப்பட்ட குடும்பக் கொண்டாட்டங்களை விட, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கே முதலிடம் கொடுத்து களத்தில் நிற்கும் முதலமைச்சர் விஜய்யின் இந்த அர்ப்பணிப்புமிக்க செயல்பாடு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசுப் பணி, குடும்பத்தின் கலைப் பயணம், மக்கள் சந்திப்பு என அனைத்துத் தளங்களிலும் வெற்றிநடை போடும் இந்தத் தலைவனின் பயணம் நாளுக்கு நாள் புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது.