Connect with us

latest news

அரியரை க்ளியர் பண்ணு… கண்டித்த அம்மா…தம்பியை கொலை செய்த மகன்…

Published

on

இப்போது இருக்கும் மாணவர்கள் எல்லாம் சின்ன விஷயத்துக்கே அதிகப்படியான கோபத்தினை காட்டி விடுகின்றனர். இது சின்னதாக இருக்கும் என்றால் பரவாயில்லை. ஆனால் அது ஆபத்தான விஷயமாகி போனால் உயிரையே காவு வாங்கும் நிலை தான்.

இதுதான் சென்னை திருவொற்றியூரில் நடந்து இருக்கிறது. திருநகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் 45 வயதாகும் பத்மா. இவருக்கு காலேஜ் படிக்கும் 20 வயது நித்தேஷ் மற்றும் 14 வயதில் சஞ்சய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். நித்தேஷ் கல்லூரியில் 14 அரியர் வைத்து இருந்தார்.

அதை முடிக்க பத்மா தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருந்து இருக்கிறார். இதில் கடுப்பான நித்தேஷ் தாய் பத்மா மற்றும் தம்பி சஞ்சய் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார். அதை தன்னுடைய உறவினர்களுக்கு தகவலாக அனுப்பி இருவரையும் கொன்றுவிட்டேன். தானும் தற்கொலை செய்து கொள்ள இருக்கிறேன். என்னை தேட வேண்டாம் என தகவல் அனுப்பிவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து உறவினர்கள் போலீசாருக்கு புகார் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நித்தேஷை தீவிரமாக தேடி வந்தனர். இறுதியாக திருவொற்றியூர் கடற்கரையில் மறைந்து இருந்தவரை கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

google news