Connect with us

latest news

விவசாயிகளுக்கு பணப்பலன் கிடைக்கச் செய்யும் பிரதம மந்திரி கிசான் திட்டம்

Published

on

நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான பொன்னான திட்டம். இதன்படி விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது 3 தவணைகளாக வழங்கப்படும். அதாவது ஒரு தவணைக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

என்னென்ன தகுதிகள்?

Kisan

ஒரு விவசாயியாக இருக்க வேண்டும். மேலும் பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் படிவத்தில் முறையாகப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இவர்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்து பலன் பெறலாம். இத்திட்டத்தின்படி ஒரு விவசாயி 2 எக்டேர் வரை நிலம் வைத்திருக்க வேண்டும்.

அல்லது உரிமையைக் கொண்ட சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருக்க வேண்டும். ஒரு விவசாயி ஜூன் 30க்கு முன் இந்தத் திட்டத்தில் பதிவு செய்தால் அவர் இரட்டை சலகைகளைப் பெற முடியும்.

புதிதாக இந்தத் திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு பதிவு செய்த உடனே ரூ.4 ஆயிரம் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு:

pmkisan.gov.in

google news