latest news
கணவன் இல்லாத சோகம்!.. தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட 4 மாத கர்ப்பிணி!…
தற்கொலை என்பது நொடி நேர உணர்ச்சிவசப்படுவதில் நடக்கும் ஒரு செயல். அந்த நொடியிலிருந்து மீண்டுவிட்டால் அந்த எண்ணத்திலிருந்து வெளியே வந்துவிட முடியும். ஆனால், பெரும் சோகம், வேதனை, விரக்தி மற்றும் மன உளைச்சல் ஆகியவையே ஒருவரை தற்கொலைக்கு தள்ளுகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்க முடியும்.
இந்நிலையில், கணவர் இல்லாத விரக்தியில் கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகேயுள்ள சொரகொளத்தூர் கிராமம் பகுதியில் வசித்து வந்தவர் அஜித்குமார். இவர் புதுச்சேரியை சேர்ந்த திவ்யபாரதி (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சர்வேஷ் என்கிற ஆண் குழந்தையும் இருக்கிறது.
இப்போது திவ்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில்தான் கடந்த மாதம் 28ம் தேதி அஜித்குமார் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால், கடந்த சில நாட்களாகவே திவ்யா மன உளைச்சளில் இருந்தார். இந்நிலையில்தான், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரை பார்க்க அவரின் தாய் பக்கியலட்சுமி வந்தார். திவ்யா தூக்கு போட்ட நிலையில் இருப்பதை பார்த்து கூச்சல் போட அருகிலிருந்தவர்கள் திவ்யாவை மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர்.
ஆனால், அவரின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் திவ்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கணவர் இறந்த 2 நாட்களில் அவரின் கர்ப்பிணி மனைவியும் தற்கொலை செய்து மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.