ஒரே மஜாதான்! மைதானத்தில் நடனமாடும் விராட்கோலி..வைரலாகும் வீடியோ.!

விராட் கோலி எந்த அளவிற்கு கோபப்படுகிறாரோ அதே அளவிற்கு மிகவும் கலகலப்பானவர்.  இது அவருடைய ரசிகர்களுக்கே தெரியும் குறிப்பாக மைதானத்தில் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில் தன்னுடைய ரசிகர்களை பார்த்து செய்கை  செய்வது, நடனம் ஆடுவது என கோலி  அடிக்கடி வித்தியாசமான ஜாலியான செயல்களில் அடிக்கடி ஈடுபடுவார். அதற்கான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும்.

அந்த வகையில், தற்போது  முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்து முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது விராட் கோலி ஜாலியாக நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இன்னிங்கிஸின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த கோலி திடீரென ஜாலியாக மனதில் எதோ ஒரு பாடலை நினைத்துக்கொண்டு நடனமாடுகிறார்.

அதைப்போல மற்றோரு வீடியோவில்  மைதானத்தின் தரையில் கீழே படுத்துக்கொண்டு ஜாலியாக விளையாடி கொண்டும், இஷான் கிஷனுடன் சேர்ந்துகொண்டு அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தார். அதற்கான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த பலரும் விராட் கோலிக்கு எப்பவும் ஒரே ஜாலிதான் எனவும், அவர் நடனமாடிய வீடியோவில் தங்களுக்கு பிடித்த பாடல்களை வைத்தும் எடிட் செய்து வருகிறார்கள்.

மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி 76 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment