இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி வந்தவர் பியூஷ் சாவ்லா. சுழற்பந்து வீச்சாளாரான இவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாட தொடங்கிய பியூஷ் சாவ்லா தனது 36வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார்.
பியூஷ் சாவ்லா 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக மூன்று டெஸ்ட் போட்டிகள், 25 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் பியூஷ் சாவ்லா அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 43 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் பியூஷ் சாவ்லா 446 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ஐ.பி.எல். தொடரை பொருத்தவரை பியூஷ் சாவ்லா பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 192 போட்டிகளில் களமிறங்கியுள்ள பியூஷ் சாவ்லா மொத்தம் 192 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஓய்வு குறித்த அறிவிப்பை பியூஷ் சாவ்லா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.