செம மாஸ் ஆட்டம்.! விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்.!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசி பல சாதனைகளை படைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் வெளிநாட்டுகளில் கிரிக்கெட் விளையாடும் போது சதம் அடிக்காததால் அவர் மீது பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் மிகவும் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி சதம் விளாசினார்.

மேலும், நேற்று சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது -29 வது சதத்தை நேற்று விராட் கோலி பதிவு செய்தார். அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் 500-வது போட்டியில் சதம் விளாசிய  முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.  அதைப்போல, இதற்கு முன்பு 29 சதங்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை வைத்திருந்த பிராட் மேனின் அந்த சாதனையும் விராட் கோலி சமன் செய்தார்.

Virat-Kohli1
Virat-Kohli

இந்த நிலையில் சதம் விலகிய  விராட் கோலிக்கு பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது சமூக விடுதலை பக்கங்களில் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவு தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி  வருகிறது.

விராட் கோலியின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள சச்சின் மற்ற நாள் போல் இன்று உங்களுடைய நாள் சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் விராட் கோலி நீங்கள்  அருமையாக விளையாடினீர்கள்” என பதிவிட்டுள்ளார். அந்த பதிவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.

Leave a Comment