அடடே சூப்பர்… இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு…மிஸ் பண்ணதீங்க மக்களே.!!

படித்துவிட்டு வீட்டில் இருக்கும் இளைஞர்கள் பலரும் வங்கி வேலைவாய்ப்பு கிடைக்குமா அதற்கான வேலை வாய்ப்பு வரும்போது எப்போது நாம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வத்துடனும் காத்திருப்பது உண்டு அந்த வகையில் தற்போது இந்தியன் வங்கி வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி,இந்தியன் வங்கி ஆனது வங்கியின்‌ தகுதி பெறும்‌ நிபந்தனைகளுக்கு ஏற்ப, வங்கக்‌ கிளைகளுக்கு வீட்டுக்கடன்‌ வியாபாரத்தை உருவாக்கி கொடுப்பதற்காக வீட்டுக்கடன்‌ (Das) முகவர்கள்‌ பணிக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை

மொத்தமாக இந்த Das பணிக்கு எத்தனை காலியிடங்கள் தான் உள்ளது என அறிவிக்காமல் உள்ளதால் எத்தனை காலியிடங்கள் உள்ளது என்பதை கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொண்டு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தகுதி

வீட்டுக்கடன்கள்‌, அடமானம்‌ வைத்துப்பெறும்‌ திட்டங்கள்‌, வாகனக்கடன்கள்‌, கிரெடிட்‌/டெபிட்‌ கார்டுகள்‌, டீமேட்‌ கணக்குகள்‌ மற்றும்‌ இதையொத்த நிதித்திட்டங்கள்‌ எவற்றையும்‌ விற்பனை செய்வதில்‌ முன்‌ அனுபவம்‌ உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கட்டிடம்‌ கட்டுவோர்‌, அடுக்குமாடி அபிவிருத்தி செய்வோர்‌, ஸ்தாபன முகமை ஆலோசனை குழுமம் சார்டர்டு அக்கவுண்ட்ஸ்‌ நிறுவனங்கள்‌, நிதி மற்றும்‌ முதலீட்டு ஆலோசனை சேவைகளை வழங்குகிற மேலாண்மை ஆலோசகர்கள்‌ இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடன் தொகையை பொறுத்து மாதம் சம்பளமாக கொடுக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு

கால இடங்களைப் போல வயதுவரம்பும் கொடுக்கப்படவில்லை என்பதால் அதனையும் நீங்களே தெரிந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது அதிகாரப்பூர்வ இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள நம்பரை தொடர்பு கொண்டு இந்த பணியி
ல் சேர எத்தனை வயது இருக்க வேண்டும் என மற்ற விவரங்களையும் நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு ஆர்வமும் விருப்பமும் இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொண்டு விண்ணப்பம் செய்து கொள்ளலாம் அல்லது தொடர்புடைய உங்களுடைய RESUME  அதாவது மேற்கண்ட அனைத்து சான்றிதழ்களையும் நீங்கள் வைத்திருந்தால் அதனை ஒரு RESUME ஆக செய்து கீழ்க்கண்டவந்த முகவரிக்கும் அனுப்பிக் கொள்ளலாம் அப்படி இல்லாதவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொண்டு வேலைக்கு விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

முகவரி – திரு.நிர்மல் இம்மானுவேல் ராஜ், உதவி மேலாளர், மண்டல அலுவலகம், நாகப்பட்டினம். செல்: 96004 61241. 

இணையதள முகவரி: www.indianbank.in 

Leave a Comment