மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்துடன் ஜிப்மர் நிறுவனத்தில் வேலை..! உடனே அப்ளை பண்ணுங்க..!

ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research), சுருக்கமாக ஜிப்மர் என்றழைக்கப்படும் இந்நிறுவனம் புதுச்சேரியில் உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இந்த ஜிப்மர் நிறுவனம் காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது நிரப்புவது வழக்கம்.

அந்த வகையில் தற்பொழுது ஒப்பந்த அடிப்படையில் தேசிய டெலிமென்டல் ஹெல்த் திட்டதிற்கு காலியாக உள்ள பல்வேறு பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் ஜிப்மர் வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை படித்துவிட்டு விண்ணப்பக்கலாம்.

காலிப்பணியிடம்: 

ஜிப்மர் நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர்/ மூத்த ஆலோசகர், சீனியர் ரெசிடெண்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், மருத்துவ உளவியலாளர், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் என பல்வேறு பணிகள் காலியாக உள்ளன.
JIPMER Recruitment
JIPMER Recruitment
விண்ணப்பதாரர் வயது:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 45வ வயது முதல் 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

  • முதுகலை முடித்த பிறகு மனநல மருத்துவத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மூன்றாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து முதுகலை மனநல மருத்துவத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து M.A./M.Sc. உளவியல் பட்டம் / மருத்துவ மனநல சமூகப் பணியில் M.A./M.S.W பட்டம் / MSc மனநல நர்சிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • உடல்நலம் தொடர்பான தொழில்நுட்பங்களில் பணிபுரிந்த 2 வருட அனுபவத்துடன், அல்லது எம்.சி.ஏ., அல்லது பொறியியலில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • கணினி பயன்பாட்டில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம் மற்றும் ஒப்பந்த காலம்:

மேற்கண்ட பணிகளுக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக வழங்கப்படும். அனைத்து பதவிகளும் முற்றிலும் 11 மாத ஒப்பந்த அடிப்படையிலானது. விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்கு தகுதி உடையவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேரடி நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்.

எப்படி விண்ணப்பிப்பது.? 

  • மேலே உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://jipmer.edu.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • பிறகு அறிவிப்பில் இருக்கும் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும்.
  • பின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தொடர்புடைய அடையாளச் சான்று, கல்வித் தகுதி, சமீபத்திய புகைப்படம், ரெஸ்யூம் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களுடன் அஞ்சல்/கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.
  • அனுப்ப வேண்டிய முகவரி, நோடல் அதிகாரி, டெலி-மனஸ், மனநலத் துறை, ஜிப்மர், புதுச்சேரி 605006, இந்தியா
JIPMER Recruitment
JIPMER Recruitment

கடைசி தேதி:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். ஜூன் 25ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இடம் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Leave a Comment