2027-ல் தைவான் மீது போர்? – 100 ஏவுகணைகளைத் தயார் செய்த சீனா! பென்டகன் வெளியிட்ட ‘ஷாக்’ அறிக்கை!

தைவானைத் தனது நாட்டுடன் இணைக்கத் துடிக்கும் சீனாவின் ‘வார் கிளாக்’ (War Clock) மிக வேகமாகச் சுழல ஆரம்பித்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் எச்சரித்துள்ளது. 2027-ஆம் ஆண்டிற்குள் தைவானை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் சீனா தனது ஏவுகணைத் தளங்களை நவீனப்படுத்தி வருவதாக ஒரு ரகசிய அறிக்கை வெளியாகியுள்ளது.

மங்கோலிய எல்லையில் 100 ஏவுகணைகள்:
பென்டகன் தயாரித்துள்ள அந்த வரைவு அறிக்கையில் இடம்பெற்றுள்ள அதிரடித் தகவல்கள், DF-31 ICBM ஏவுகணைகள், மங்கோலியா நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள ரகசியத் தளங்களில், சீனா சுமார் 100-க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBMs) ஏவுவதற்குத் தயாராக நிலத்தடி அறைகளில் (Silos) நிறுத்தி வைத்துள்ளது.

அணு ஆயுதக் குவிப்பு:
சீனாவின் அணு ஆயுதக் கிடங்கில் 2024-ல் 600-ஆக இருந்த வார்டெட்களின் எண்ணிக்கை, 2030-க்குள் 1,000-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட தூரத் தாக்குதல்:
சீன நிலப்பரப்பிலிருந்து சுமார் 2,000 கடல் மைல்கள் (Nautical Miles) தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளைச் சீனா உருவாக்கி வருகிறது.

அமெரிக்கப் படைகளுக்குச் சவால்:
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களைத் தாக்கி அழிப்பதே சீனாவின் முதன்மை நோக்கமாக உள்ளது.

“இந்தத் தாக்குதல்கள் போதிய வேகத்திலும் அடர்த்தியிலும் இருந்தால், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இருப்பையே சீனா சீர்குலைத்துவிடும்,” எனப் பென்டகன் தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் வியூகம் ?
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொள்ளப் பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், சீனாவின் இந்த நகர்வு உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா மற்றும் ரஷ்யாவுடன் அணு ஆயுதக் குறைப்பு பேச்சுவார்த்தைக்குத் தாம் தயார் என ட்ரம்ப் கூறி வரும் நிலையில், சீனா அதற்கு எந்த ஆர்வமும் காட்டாமல் தனது போர் பலத்தைப் பெருக்கி வருகிறது.

2027-ஆம் ஆண்டு என்பது சீனாவின் ராணுவ வலிமை உச்சத்தை அடையும் காலமாகக் கணிக்கப்பட்டுள்ளதால், அந்த ஆண்டுக்குள் தைவான் மீதான ‘நேரடி ஆக்கிரமிப்பு’ (Full-scale invasion) நிகழலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Comment