2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சி, ஒற்றை இலக்கத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், நடிகர் விஜய்க்குத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு இல்லை என்றும் பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி அதிரடியாகக் கணித்துள்ளார்.
கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களின் முடிவுகளைத் துல்லியமாகக் கணித்தவர் என்ற நிலையில், இவரது தற்போதைய கணிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதிடர் பிரசாந்த் கினி இதற்கு முன் நடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும் வெளியிட்ட கணிப்புகள் மிகச் சரியாகப் பலித்திருந்தன. இந்தக் கணிப்புகளின் நம்பகத்தன்மையின் பின்னணியில், தற்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட்டுள்ள தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.
2026 தேர்தலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்துப் பேசியுள்ள பிரசாந்த் கினி, “2026 தேர்தலில் விஜய் வெல்ல மாட்டார். அவருக்குப் பெரிய பாதிப்பு எதையும் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தாது,” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஒற்றை இலக்கத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். கண்டிப்பாகத் தோல்வி அடையும். தவெக சிங்கிள் டிஜிட் தொகுதிகளையே வெல்லும். விஜய்க்கு வெற்றி வாய்ப்பு இல்லை,” என்று அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரசாந்த் கினியின் இந்த ஜோதிடக் கணிப்பு, விஜய் மற்றும் அவரது கட்சியின் ஆதரவாளர்களிடையே சிறிது ஏமாற்றத்தை அளித்தாலும், அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் இந்தத் தேர்தல் முடிவுக் கணிப்பு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.