தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், தொண்டர்களின் உணர்ச்சிப் பெருக்கு எல்லை கடந்து காணப்பட்டது. குறிப்பாக, தவெக பெண் தொண்டர் ஒருவர் தனது குடும்பத்தையே மிரட்டும் வகையில் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
9 உயிர்கள்.. ஒரே ஒரு ஓட்டு!:
ஈரோடு விஜயமங்கலம் மைதானத்திற்கு வந்திருந்த அந்தப் பெண் தொண்டர், செய்தியாளர்களிடம் பேசுகையில் மிகவும் ஆவேசமாகக் காணப்பட்டார். அவர் கூறியதாவது,
“எங்கள் வீட்டில் மொத்தம் 9 பேர் இருக்கிறார்கள். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் அனைவரும் தவெக தலைவர் விஜய்க்கு மட்டும்தான் ஓட்டு போட வேண்டும். அப்படிப் போடவில்லை என்றால், அவர்களுக்குச் சாப்பாட்டில் விஷம் வைத்து நானே கொன்றுவிடுவேன். அந்த அளவிற்கு எனக்கு விஜய் அண்ணா மீது வெறி இருக்கிறது” என்று பகீர் பேட்டியளித்தார்.
பாசத்தின் வெளிப்பாடாக இருந்தாலும், ஒரு ஜனநாயக நாட்டில் வாக்குரிமைக்காகச் சொந்தக் குடும்பத்தையே விஷம் வைத்துக் கொல்லத் துணிவேன் என்று ஒரு பெண் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “அரசியல் ஈடுபாடு என்பது கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, இப்படி உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இருக்கக் கூடாது” என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.