என்ன சாப்பிடுற..? மாத்தி ஏதும் சாப்பிடுறியா..?.. விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்ஸ்யை பொளந்த போஸ் வெங்கட்..

“எங்களிடம் விர்ச்சுவல் வாரியர்ஸ் இருக்கிறார்கள்” என்று மேடைக்கு மேடை முழங்கும் த.வெ.க தலைவர் விஜய்க்கு, அந்த வாரியர்ஸ்கள் செய்யும் அநாகரிகச் செயல்கள் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. விஜய்யை விமர்சிப்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைப்பதும், அவர்களின் குடும்பத்துப் பெண்களைக் கேவலமாகச் சித்தரிப்பதும் இன்று ஒரு ஃபேஷனாகவே மாறிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி நடிகர் போஸ் வெங்கட் தற்போது ஆவேசமாகப் பொலந்து கட்டியிருக்கிறார்.

குடும்பத்தை இழுப்பதா நாகரிகம்?
சமூக வலைதளங்களில் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து யாராவது ஒரு சிறு விமர்சனம் வைத்துவிட்டால் போதும், உடனே அந்த ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ படையெடுத்து விடுகிறார்கள். விமர்சனம் செய்பவரின் அப்பா, அம்மா, மனைவி என ஒட்டுமொத்த குடும்பத்தையும் கிழித்து தொங்கவிடுகிறார்கள்.

இது குறித்துப் பேசிய போஸ் வெங்கட், “விஜய்யை விமர்சிப்பவர்களுக்குக் குடும்பம் இருக்காதா? அவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இவர்கள் எதைச் சாப்பிட்டுவிட்டு இப்படி அலைகிறார்கள்? இவர்களின் மனநிலை மிகவும் வக்கிரமாக இருக்கிறது. இதை விஜய் கண்டிக்காதது ஏன்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் ‘பாட்’ அரசியல்?
விஜய்யின் சமூக வலைதளப் பதிவுகளுக்கு வரும் லட்சக்கணக்கான ‘லைக்ஸ்’ மற்றும் ‘கமெண்ட்ஸ்’களின் பின்னணியில் ஒரு பெரிய நுட்பம் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற ஏழை நாடுகளில் ‘கிளிக் ஃபார்ம்ஸ்’ (Click Farms) மூலம் காசு கொடுத்தால் லைக் போட ஆட்கள் கிடைக்கிறார்கள்.

இந்த ‘விர்ச்சுவல்’ மாயையை வைத்துக்கொண்டு தமிழகத்தில் அரசியல் செய்துவிடலாம் என விஜய் நினைப்பது வெறும் பகற்கனவுதான் என்கிறார் வெங்கட். “லைக்குகளைக் காசு கொடுத்து வாங்கிவிடலாம், ஆனால் வாக்குகளை வாங்க முடியுமா? விர்ச்சுவல் உலகில் சிங்கம் போலச் சத்தம் போடும் இந்தக் கூட்டம், நிஜ உலகில் ஓட்டுப் போட வருமா?” என்பதே சாமானிய மக்களின் கேள்வியாக இருக்கிறது.

திருந்துவார்களா ரசிகர்கள்?
விஜய் அடிக்கடி தன் உரைகளில் “என் நெஞ்சில் குடியிருக்கும்” என்று ரசிகர்களை அழைப்பார். ஆனால் அந்த ரசிகர்கள், எதிர்த்தரப்பினரின் “வீட்டுக்குள்” புகுந்து அநாகரிகமாகப் பேசுவது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கே உலை வைக்கும் விதமாக உள்ளது.

இந்த விர்ச்சுவல் அராஜகத்தைக் கட்டுப்படுத்த விஜய் என்றாவது அறிக்கை விடுவாரா? அல்லது “விர்ச்சுவல் வாரியர்ஸ்” என்கிற பெயரில் இந்த வக்கிரக் கலாச்சாரம் தொடரப் போகிறதா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment