ஆள வச்சாவது அரசியல் கத்துக்கோங்க விஜய்!.. இப்டியே இருந்தா கூப்புதான்!…

ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படும் விஜய் அரசியல்வாதியாக மாறிய பின் அவர் மீது பல விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஒரு கட்சிக்கு தலைவராக மாறிவிட்டாலும் விஜய் இன்னும் ஒரு அரசியல்வாதியாக மாறவில்லை என்பதே நிஜம். இன்னும் ஒரு நடிக மனப்பான்மையில்தான் அவர் இருக்கிறார். கருப்பு கண்ணாடி மூடப்பட்ட காரில் வந்து என்ன எழுதிக் கொடுத்தார்களோ.. எதை பேச சொன்னார்களோ அதை மட்டும் பேப்பரைப் பார்த்து பேசிவிட்டு காரில் ஏறி பறந்து விடுகிறார். ஒரு நடிகனுக்கு இது ஓகே.. ஆனால் அரசியல்வாதியாக இது போதுமா?..

பேப்பரை பார்த்து பேசும் பல அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். அது குறிப்பாக மட்டுமே இருக்கும். ஆனால் விஜய் பேப்பரை பார்த்து மட்டுமே பேசுவதுதான் பிரச்சனை. தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி, தனது ரசிகர் மன்றங்களை நெறிப்படுத்தி, அதை மக்கள் இயக்கமாக மாற்றி, ஒரு அரசியல் கட்சியில் போல மாற்றிய தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரை விஜய் கழட்டி விட்டு தவறு செய்தார்.  கட்சி துவங்கிய பின் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் செல்வதை மட்டுமே கேட்டு விஜய் செயல்பட்டு வருகிறார் என தவெக நிர்வாகிகளே சொல்கிறார்கள்.

tvk vijay
tvk vijay

முக்கியமாக, ஒரு அரசியல் தலைவர் எல்லோரும் சுலபமாக அணுகக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும். ஆனால் விஜயோ கேரவனில் இருந்து இறங்கி வந்து இயக்குனர் சொன்ன காட்சியில் நடித்துவிட்டு மீண்டும் கேரவேனுக்கு சென்று விடும் நடிகரைப் போலவே இப்போதும் இருக்கிறார். கட்சியிலும் சரி.. நாட்டிலும் சரி.. என்ன நடக்கிறது என்பதை அவரிடம் இருப்பவர்கள் அவருக்கு சொல்கிறார்களா என்பதை தெரியவில்லை.

விஜய்க்கும் அவரின் கட்சி நிர்வாகிகளுக்கும் எந்த அளவுக்கு அரசியல் நடவடிக்கைகள் தெரிந்திருக்கிறது என்பதற்கு கரூர் சம்பவமே ஒரு பெரிய சாட்சி. சரி சம்பவம் நடந்து விட்டது.. விஜய் களத்திலேயே இருந்திருக்க வேண்டும்.. என் மக்களை நான் சந்திப்பேன் என்று அவர் அங்கே போராட்டம் செய்திருக்க வேண்டும்.. அவரோ விமானம் ஏறி சென்னை வந்து விட்டார்.

நிர்வாகிகளோ வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து வெளியேறி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகி விட்டார்கள். இதைவிட கொடுமை செய்தியாளர்களிட்ம் விஜய் பேசுவதே இல்லை. இப்படி இருந்தால் தவெக மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?. ஒருநேர்காணலில் அமர்ந்து செய்தியாளர் கேள்விகளை எதிர்கொண்டு சரியான பதிலை சொல்லி ஸ்கோர் செய்யவேண்டும். தன் அரசியல் வாழ்க்கையில் விஜய் இதை செய்வாரா தெரியவில்லை.

tvk vijay party
tvk vijay party

களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக நிற்பதுதான் அரசியல். ஆனால் நான் வந்தால் கூட்டம் கூடிவிடும்.. சமாளிக்க முடியாது. வரமுடியாது.. என்று சொல்பவருக்கு எப்படி அரசியல் செட் ஆகும்?.. அதற்குதானே காவல்துறை இருக்கிறது. வீட்டிலிருந்து நேராக ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று நடித்துவிட்டு அந்த படம் ஹிட்டாகி விடும் என நினைப்பது போல அரசியலையும் கையாளுகிறார் விஜய். வீட்டிலிருந்து நேராக பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு சென்று மனப்பாடம் செய்ததை 10 நிமிடங்களில் அடித் தொண்டையில் கத்தி பேசிவிட்டு கிளம்பி போய் விடுகிறார். இப்படி செய்தால் மக்கள் நமக்கு வாக்களித்து விடுவார்கள் என விஜய் நம்புகிறார்.

கரூர் சம்பவம் நடந்து பல நாட்கள் கழித்து வெளியே வந்து புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பேசினார் விஜய். அந்த கூட்டத்தை அவர் சரியான பயன்படுத்தி அவர் மீது விழந்த பழிச்சொல்லுக்கு பதில் சொல்லியிருக்க வேண்டும். தன் செயலை நியாயப்படுத்தியாவது பேசியிருக்க வேண்டும். ஆனால், கரூர் சம்பவம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சர்ச்சையை ஏற்படுத்திய திருப்பரங்குன்ற சம்பவம் பற்றியும் எதுவும் வாய் திறக்கவில்லை. திமுகவை கூட பெரிய அளவில் விமர்சனம் செய்யவில்லை. 9 நிமிடங்களுக்கு மேல் அவர் பேசவே இல்லை. இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு பொதுக்கூட்டம் 9 நிமிடங்களில் முடிந்தது தவெகவில் மட்டும்தான்..

விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி இல்லை. ‘புதுச்சேரியில் தம்பி விஜய் பேசியது அரசியல் அறிவின்மையின் வெளிப்பாடு.. அவருக்கு சரியான வழிகாட்டி இல்லை.. எங்கள் மாநிலத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. உங்கள் அரசியல் நாடகத்தை தமிழ்நாட்டோடு வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி.

Puducherry tvk vijay
Puducherry tvk vijay

விஜய் முதலில் தமிழக அரசியலின் வரலாற்றை படிக்க வேண்டும். மக்களிடம் எப்படியெல்லாம் பேசி வெற்றி பெற்றார்கள்? எப்படி களப்பணி ஆற்றுவது? மக்களுக்காக எப்படி போராடுவது? எதையெல்லாம் எதிர்த்து அறிக்கைகள் விட வேண்டும்? அரசியலில் எப்படி லைம் லைட்டிலேயே இருக்க வேண்டும்? என்பதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்.. அதைவிட்டுவிட்டு இப்படியே இருந்தால் அவரால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில் இப்போதாவது விஜய் தன்னை சுதாரித்துக் கொள்ள வேண்டும்.. இவன் வந்தால் நல்லது செய்வான்.. என் வாழ்க்கயை மாற்றுவான்.. என்கிற நம்பிக்கையை வாக்காளனிடம் ஏற்படுத்த வேண்டும்.. அதைவிட்டுவிட்டு விஜய் இன்னும் தன்னை ஒரு ஸ்டார் நடிகராகவே நினைத்துக் கொண்டிருந்தால் கூப்புதான்
…

Leave a Comment