விஜய்யை ஜெயிக்க வைக்கப்போறது தவெக இல்ல.. இவங்கதான் ‘விசில்’ சத்தம் வேற லெவல்ல கேட்கப்போகுது!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அதிரடியாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வெற்றி வாய்ப்புகள் குறித்து சினிமா மற்றும் அரசியல் விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு சுவாரஸ்யமான மற்றும் ஆழமான கணிப்பை முன்வைத்துள்ளார்.

அவர் தனது சமீபத்திய நேர்காணலில், விஜய்யின் வெற்றிக்கு பின்னால் இருக்கப்போகும் ‘அனுதாப அலை’ (Sympathy Wave) மற்றும் எதிர்க்கட்சிகளின் ‘தவறான வியூகம்’ பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.

அநாகரிக விமர்சனங்களே விஜய்யின் அஸ்திரம்:
பிஸ்மி தனது அலசலில், “தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் நீண்டகாலமாக ஒரு பாணியைப் பின்பற்றி வருகின்றன. தங்கள் எதிரிகளை கொள்கை ரீதியாகத் தாக்குவதை விட, தனிநபர் ரீதியாகவும், அநாகரிகமாகவும் விமர்சிப்பதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். இதுதான் விஜய்க்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக அமையப்போகிறது” என்கிறார். தேர்தல் மேடைகளில் விஜய் மீதான இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்கள் எழும்போது, நடுநிலை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அவர் மீது ஒரு பெரிய அனுதாபம் உருவாகும் என்பது பிஸ்மியின் வாதம்.

திமுவை ஜெயிக்க வைக்கப்போவது தவெக அல்ல!
விஜய்யின் வெற்றியை அவரது கட்சியின் தொண்டர்கள் மட்டும் தீர்மானிக்கப்போவதில்லை. மாறாக, திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள்தான் அவருக்குப் பெருவெற்றியைத் தேடித் தரப்போகிறார்கள் என பிஸ்மி கூறுகிறார். “அவர்கள் விஜய்யை நோக்கி வீசும் ஒவ்வொரு கல்லும், அவருக்கு ஆதரவான ஓட்டுக்களாக மாறும். குறிப்பாக, விஜய்யை ஒரு கத்துக்குட்டியாகவோ அல்லது சினிமா நடிகனாகவோ மட்டும் சுருக்கிப் பார்த்து அவர்கள் செய்யும் ஏளனம், பொதுமக்களிடம் ‘ஒரு இளைஞரை இப்படித் துன்புறுத்துகிறார்களே’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்” என்று அவர் விளக்கியுள்ளார்.

தாக்குதலில் இருந்து எழும் ஆதரவு அலை:
விஜய் ஏற்கனவே தனது பேச்சுகளில் திமுக-வை ஊழல் கட்சி என்றும், அதிமுக-வை கொள்கையற்ற கட்சி என்றும், பாஜக-வை சித்தாந்த எதிரி என்றும் வெளிப்படையாகத் திட்டத் தொடங்கிவிட்டார். “விஜய் இந்தத் தாக்குதலைத் தொடங்கியதன் மூலமே அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துவிட்டார். இப்போது பந்து மற்ற கட்சிகளின் வசம் உள்ளது. அவர்கள் பதிலுக்கு விஜய்யைத் தாக்கும்போது, அந்தத் தாக்குதல் எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ, அந்தளவுக்கு விஜய்க்கான ஆதரவு அலை பலமாக ஒலிக்கும்” என்கிறார் பிஸ்மி.

அமைதிக்கு பின்னால் இருக்கும் வியூகம்:
விஜய் தற்போது காட்டும் நிதானமும் அமைதியும் ஒரு திட்டமிட்ட அரசியல் நகர்வுதான். எதிரிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து, அதற்கேற்ப தனது ஆதரவு அலையைத் தயார் செய்யும் வேலையில் அவர் இருப்பதாக பிஸ்மி குறிப்பிடுகிறார். “விஜய் எதிர்பார்த்ததை விடப் பெரிய வெற்றியை இந்த ‘அனுதாப அரசியல்’ அவருக்குப் பெற்றுத் தரும்” என்பதே பிஸ்மியின் இறுதி முடிவாக இருக்கிறது.

Leave a Comment