இந்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் பிஎஸ்என்எல் மக்களின் நம்பிக்கையை பெற்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இன்று ஜியோ,ஏர்டெல் ஆதிக்கம் இந்தியா முழுவதும் அதிகம் பரவி காணப்பட்டாலும் தனக்கென தனி கஷ்டமர்களைக் கொண்டு என்றும் போட்டியில் நிலைத்து நின்று கொண்டது ஒரு காரணம் அதன் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான்.
மற்ற நெட்வொர்க்கள் 5g சேவையை இந்தியாவில் கொண்டு வந்தாலும் இன்னும் 4ஜி சேவை மட்டும்தான் இந்த நெட்வொர்க் கொடுத்து வருகிறது. இருந்த போதும் அதன் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதற்கு காரணம் எங்கு சென்றாலும் தடையில்லா நெட்வொர்க் கிடைக்கிறது. மேலும் ஏர்டெல் ஜியோ உடன் ஒப்பிடுகையில் ரீசார்ஜ் திட்டம் மிகக்குறைவாக இருப்பது முக்கிய காரணமாக பார்க்க முடிகிறது.
அந்த வகையில் தற்போது புதிய ரீசார்ஜ் திட்டத்தை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் இருக்குமாறு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கிராமப்புற இனிய மக்களுக்கு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். அவர்கள் ஏதாவது கற்றுக்கொள்ள இந்த திட்டம் உதவியாக இருக்கும். அப்படி 40 நாட்கள் வேலிடியுடன் 400 ரூபாய்க்கு 400 ஜிபி டேட்டா என்ற புதிய ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது bsnl.
400 ரூபாய்க்கு 400GB டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது 1 ரூபாய்க்கு 1 ஜிபி என்று 400 ரூபாய்க்கு 400 ஜிபி டேட்டா வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை bsnl தொடங்கியுள்ளது. இந்த திட்டம் ஜூன் 28 இலிருந்து ஜூலை1ம் தேதி வரை மட்டுமே. அதன் பின் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த பிளான் இருக்காது.
எனவே இது ஒரு லிமிடெட் பீரியட் ஆஃபர் இன்று மற்றும் நாளை என இரு தினங்களில் மட்டுமே இருக்கிறது. இந்த 400 ரூபாய்க்கு 400 gb டேட்டா திட்டத்தின் கால நாட்கள் 40 நாட்கள் மட்டுமே. இந்த 40 நாட்களுக்கு அன்லிமிடெட் 4ஜி இன்டர்நெட் சேவை வருகிறது. இன்று கிராமப்புறங்களில் வசிக்கும் அவர்களுக்கு இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கலாம். எனவே இதனை பயன்படுத்த நினைப்பவர்கள் ஜூலை ஒன்னு அதாவது நாளைக்குள் ரீசார்ஜ் செய்து பயன்பெறலாம்