தவெக-வில் போஸ்டிங்? உடைத்துப் பேசிய தாடி பாலாஜி..

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய்யின் நீண்ட கால நண்பரும், நடிகருமான தாடி பாலாஜி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி, பதவி ஆசையின்றி தலைவர் மீதும் கட்சியின் அடிப்படை நோக்கங்கள் மீதும் அவர் கொண்டுள்ள விசுவாசத்தைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

விஜய்யின் முன்னாள் பி.ஆர்.ஓ. பி.டி. செல்வகுமார் தி.மு.க.வில் இணைந்த பரபரப்பான அரசியல் சூழலில், தாடி பாலாஜியின் இந்த உறுதியான கருத்துகள் த.வெ.க. தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நண்பனே பெரிய போஸ்டிங் :

தாடி பாலாஜி தனது பேட்டியில், த.வெ.க.வில் தனக்குப் பதவி அளிக்கப்படாதது குறித்துப் பேசியுள்ளார்.

“விஜய் சார் கட்சியில் எனக்கு போஸ்டிங் கொடுக்கவில்லை என்று நான் வருத்தப்படவில்லை. அவருடைய நண்பன் என்பதே எனக்குக் கிடைத்த பெரிய போஸ்டிங் தான். அதுக்காக அவருக்காக உழைக்கிறேன் அவ்வளவுதான்.”

“கரூர் சம்பவம் கேள்விப்பட்டதும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன உடனே வீட்டுக்குப் போகாமல் சம்பவ இடத்துக்குப் போனேன். அங்க போய் மக்கள்கிட்ட தலைவர் உங்களை நிச்சயமாகச் சந்திப்பார் என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தேன்.”

உழைப்புக்கான எதிர்பார்ப்பு :

கட்சிக்காகத் தொடர்ச்சியாக உழைக்கும் அடிப்படைத் தொண்டர்களுக்கான அங்கீகாரம் குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்தார். “காலம் மாறும். அப்பொழுது நமக்காக இவர்கள் உழைத்தார்கள் என்று விஜய் நினைத்து அவர்களுக்கு ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.”

அரசியல் பார்வை : 

பி.டி. செல்வகுமார் போன்றோர் கட்சியில் இருந்து வெளியேறி, ரசிகர் மன்றத்தினருக்கு முக்கியத்துவம் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள நிலையில், தாடி பாலாஜியின் இந்த உழைப்பு மற்றும் நட்பு சார்ந்த விசுவாசக் கருத்துகள், விஜய்க்கும் அவரது கட்சிக்கும் ஒரு பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
பதவிக்காக இல்லாமல், நட்புக்காகவும், தலைவர் மீதான நம்பிக்கைக்காகவும் உழைக்கும் தாடி பாலாஜியின் செயல், அடிப்படைத் தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

Leave a Comment