தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களும் தங்களது வேட்பாளர் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் கடைபிடிக்கும் வெவ்வேறு அணுகுமுறைகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
திமுகவின் நேர்காணல் என்பது ஒரு சம்பிரதாய சடங்காக மாறிவிட்டதோ என்ற ஐயம் எழுகிறது. கும்பல் கும்பலாக ஆட்களை அமர வைத்து, தனிப்பட்ட திறமைகளை ஆராயாமல், ஏற்கனவே தயார் செய்யப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் ‘சாத்து சாத்து’ என்று சாத்தும் போக்கு அங்கு நிலவுகிறது. 25,000 ரூபாய் கட்டிவிட்டு ஒரு காபி மட்டும் குடித்துவிட்டு வரும் நிலையில்தான் பல வேட்பாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் தேர்வு முறை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. பரிந்துரைகளுக்கோ அல்லது பண பலத்திற்கோ இடம் கொடுக்காமல், உளவுத்துறை மற்றும் ரகசிய கணக்கெடுப்பு அறிக்கைகளின் அடிப்படையில் வெற்றி வாய்ப்புள்ளவர்களை அவர் அடையாளம் கண்டுள்ளார். இதனால், நீண்டகாலமாக பதவியில் இருப்பவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டு, புதிய முகங்களுக்கும் சாதாரண தொண்டர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இது ஒரு துணிச்சலான முடிவாக பார்க்கப்படுகிறது.
விஜய் போன்ற புதிய அரசியல் வருகைகள் இன்னும் முதிர்ச்சியடையாத நிலையிலேயே உள்ளன. தனது ரசிகர்களுக்குக் கல்வி மற்றும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட, சினிமா பாணியிலான வசனங்களை பேசுவதிலேயே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். குறிப்பாக புதுச்சேரி போன்ற இடங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்து மோதலில் ஈடுபட்டது, அந்த கட்சியின் உட்கட்டமைப்பில் உள்ள பலவீனத்தை காட்டுகிறது. பணத்தை பிரதானமாக கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்யும் போக்கு புதிய கட்சிகளிலும் ஊடுருவியிருப்பது வருத்தத்திற்குரியது.
திமுகவில் நிலவும் வாரிசு அரசியல் மற்றும் பணக்காரர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் கலாச்சாரம் உண்மையான விசுவாசிகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. அமைச்சர்களின் வாரிசுகள் மற்றும் உதயநிதியின் நண்பர்களுக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படுவதால், அடிமட்ட தொண்டர்கள் ஏழாவது லேயரில் கூட வர முடியாத நிலை நீடிக்கிறது. ராஜகண்ணப்பன் போன்ற மூத்த அமைச்சர்களே தனது மகனுக்கு சீட் கேட்டு திமுக தலைமையுடன் முரண்படும் சூழல் நிலவுகிறது. இது போன்ற உட்கட்சி மோதல்கள் தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
திமுக வேட்பாளர் தேர்வு முறையின் 6 முக்கிய நிலைகள் இருப்பதாக் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முதல் நிலை (குடும்ப உறுப்பினர்கள்): கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு முதலிடம் வழங்கப்படுகிறது.
இரண்டாம் நிலை (வாரிசுகள்): தற்போதைய அமைச்சர்களின் மகன்கள் மற்றும் வாரிசுகளுக்கு அடுத்தகட்ட முன்னுரிமை கிடைக்கிறது.
மூன்றாம் நிலை (நட்பு வட்டம்): உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நான்காம் நிலை (கார்ப்பரேட்டுகள்): கட்சிக்கு நிதி வழங்கக்கூடிய பெரும் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
ஐந்தாம் நிலை (பரிந்துரைகள்): கட்சியின் முக்கிய புள்ளிகள் மற்றும் ‘கிச்சன் கேபினட்’ பரிந்துரைக்கும் நபர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது.
ஆறாம் நிலை (மாவட்ட செயலாளர்கள்): எஞ்சியிருக்கும் ஒரு சில இடங்கள் மட்டும் மாவட்ட செயலாளர்களுக்கும், அவர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கும் பிரித்தளிக்கப்படுகின்றன.
ஆனால் கடைசி வரை கடைகோடி திமுக தொண்டனுக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட இல்லை என்பது தான் திமுகவை பொருத்தவரை உண்மையாக இருந்து வருகிறது. நான் பரம்பரை பரம்பரையாக திமுககாரன் என்று சொல்பவர்கள் கடைசி வரை பரம்பரை பரம்பரையாக தொண்டனாக இருக்க வேண்டியது தான்.