விஷ சாராயம் குடித்த விவகாரம்!. 50 பேர் பலி!. 50 பேர் உயிர் பிழைத்தது எப்படி?…

கள்ளக்குறிச்சியில் கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலம் கேட்டு வருகிறது. கர்ணாபுர பகுதி முழுவதும் கண்ணீர் மயமாக காணப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதில் வசிக்கும் பலர் கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்தி இருக்கிறார்கள். அன்றே இரவு வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஆகிய பிரச்சனை ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அதன்பின் ஒவ்வொருவராக இறந்து போனார்கள்.

அந்த இறப்பில் கலந்து கொள்ள சென்ற சிலரும் பாக்கெட் சாராயத்தை வாங்கி அருந்தியுள்ளனர். அவர்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பலி எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போனது. இப்போதுவரை 50 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இது அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் வீட்டில் இருந்தே சாராய விற்பனை அமோகமாக நடந்துள்ளது தமிழகமெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. கண்ணுக்குட்டி என்பவ்வர்தான் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து வந்திருக்கிறார். அவரையும், அவரின் மனைவி மற்றும் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தினம் ஆயிரம் ரூபாய்க்கு வேலை செய்த சிலரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

இதில், ஒரு பாக்கெட் மட்டும் குடித்த 50 பேருக்கு இரத்த சுத்தகரிப்பு செய்து மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். ஆனால், 2 மற்றும் அதற்கு மேல் குடித்தவர்களை காப்பாற்ற முடியவில்லை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Comment