டபுள்டக்கர் நாராயணா அலர்ட் ஆகிக்கோப்பா..சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சோதனை ஓட்டம்!

நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், அதிகரித்து வரும் மக்கள் தொகையின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் இரட்டை அடுக்கு (டபுள் டெக்கர்) பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தற்போது சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அடையாறு முதல் மாமல்லபுரம் வரை இந்த இரட்டை அடுக்கு பேருந்தின் சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களாக அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரையிலான வழித்தடத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக, இந்தப் பேருந்துகள் வழக்கமான பயணிகள் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாடு ஆகிய இரண்டுக்கும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக பயணிகளுக்கு தீர்வு டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டால், நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு தீர்வாக அமையும் என்ற கருத்து எழுந்துள்ளது.

பேருந்தில் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை சாதாரண அரசுப் பேருந்து சுமார் 60 பேர் என்றால், டபுள் டெக்கர் பேருந்தில் சுமார் 90 பேர் (50% கூடுதல்)ஒரு பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்பதால், சாலைகளில் பேருந்துகளின் எண்ணிக்கை ஓரளவுக்குக் குறையும் என்றும்,

இதன் மூலம் பயணிகளுக்கு வசதியும், போக்குவரத்தில் நிவாரணமும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகள் விரைவில் சென்னை மக்களுக்குப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment