தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ‘Y’ பிரிவு பாதுகாப்பு மற்றும் அவரது அரசியல் நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பகிர்ந்துள்ள அதிரடியான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
சம்பளம் முதல் ரெய்டு வரை பின்னணி என்ன?
விஜய் ஒரு படத்திற்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகத் தகவல் பரவிய நிலையில், மத்திய அரசு வருமான வரித்துறை மூலம் அவருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கவே அவருக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “மக்கள் இதை விஜய்க்கு வழங்கப்பட்ட கௌரவமாகவோ அல்லது பாதுகாப்பாகவோ பார்க்கிறார்கள். ஆனால், உண்மையில் இது அவரைச் சுற்றி இருக்கும் உளவுத்துறையின் ஒரு கண்காணிப்பு வளையம். அவர் எங்கு செல்கிறார், யாரைச் சந்திக்கிறார் என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளவே இந்தப் படை” என்று பகீர் கிளப்பியுள்ளார்.
ஜெயலலிதாவிடம் ‘வெயிட்’ பண்ணிய விஜய்:
விஜய்யின் தற்போதைய அரசியல் அமைதியைக் குறித்துப் பேசிய காந்தராஜ், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஆரம்பித்த காலத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒருமுறை விஜய்யை நேரில் அழைத்தாராம். காலை 10 மணிக்குச் சென்ற விஜய், மாலை 4 மணி வரை காத்திருந்தும் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியவில்லையாம்.
இறுதியில், “அம்மா இன்று உங்களைப் பார்க்க விரும்பவில்லை” என்று கூறி உதவியாளர் அவரை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த விஜய், உடனே தனது தந்தையிடம் சென்று, “கட்சியை இப்போதே கலைக்கிறீர்களா? இல்லை அப்பா-மகன் உறவை முறிக்கவா?” என்று கோபமாகக் கேட்டு, கட்சியை அன்று கலைக்க வைத்தாராம்.
அமலாக்கத்துறை மிரட்டல்?
அன்று ஜெயலலிதா கொடுத்த அழுத்தம் போல, இன்று அமலாக்கத்துறையின் (ED) மிரட்டல்கள் விஜய்க்கு வருவதாகவும், அதன் காரணமாகவே அவர் எந்தப் பெரிய போராட்டங்களிலும் இறங்காமல் அமைதியாக இருப்பதாகவும் காந்தராஜ் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் இந்தப் புதிய அரசியல் பயணம், இதுபோன்ற சவால்களை எப்படிக் கடக்கப்போகிறது என்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.