மதுபிரியரின் அட்ராசிட்டி… கழிவுநீர் கால்வாயில் கிடந்த சடலம்… மீட்க சென்ற காவலர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….

மதுபோதை ஆசாமிகள் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் மதுரையை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் செய்த அலப்பறை தான் தற்போதைய சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மதுரையை சேர்ந்த கோரிப்பாளையத்தின் கழிவுநீர் கால்வாயில் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டனர். சடலத்தினை மீட்க தீயணைப்பு துறை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கழிவுநீர் கால்வாயில் கிடந்த சடலத்தினை மீட்கலாம் என தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறங்கி பார்க்க அந்த சடலத்தில் உயிர் இருந்தது. அதை தொடர்ந்தே அவர் உயிரிழக்கவெல்லாம் இல்லை. மதுபோதையில் தான் எங்கு இருக்கிறோம் என தெரியாமல் சென்று கால்வாயினுள் சென்று படுத்து இருக்கிறார்.

ஆட்டோ டிரைவரான அவர் போதையில் இப்படி செய்தது. அங்கிருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவரை வெளியில் எடுத்த காவலர்கள் யார் என்ன என்பதை விசாரித்து அவரை குளிக்க வைத்து அனுப்பினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment