டெக் உலக பில்லியனரான எலான் மாஸ்க், தனது 12-வது குழந்தையை வரவேற்றிருக்கிறார்.
உலக அளவில் மக்கள் தொகை குறைந்துவருவதாக அவ்வப்போது பேசி தனது கவலையை வெளிப்படுத்துவதை எலான் மஸ்க் வாடிக்கையாகக் கொண்டிருப்பவர். இந்தநிலையில், அவருக்கு 12-வதாக ஒரு குழந்தை பிறந்திருப்பதை ப்ளூம்பெர்க் இதழ் உறுதி செய்திருந்தது.
எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனத்தின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கக் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஷிவான் ஜில்ஸ்தான் குழந்தையின் தாய். `நீங்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென எலான் மஸ்க் விரும்புகிறார்’ என்கிற தலைப்பில் வெளியான அந்த செய்தி வைரலாகப் பரவியது.
தனக்கு 12-வதாகக் குழந்தை பிறந்திருப்பது ரகசியம் அல்ல என்று குறிப்பிட்டிருக்கும் மஸ்க், இதுகுறித்து தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் கூறியிருக்கிறார். இதற்கென பிரத்யேகமான பிரஸ் ரிலீஸ் கொடுப்பது விநோதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அதேநேரம், குழந்தையின் பாலினம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.




