அபிஜித் உண்மையிலேயே படித்தவன் தானா? இல்லை படித்த முட்டாளா? ஒரு தேர்தல் ஆணையரை அவ்வளவு சிக்கிரத்தில் டிஸ்மிஸ் செய்ய முடியாது.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உள்ள பவர் தேர்தல் ஆணையருக்கும் உண்டு.. அவரை நீக்கனும்ன்னா,

அபிஜித் உண்மையிலேயே படித்தவன் தானா? இல்லை படித்த முட்டாளா? ஒரு தேர்தல் ஆணையரை அவ்வளவு சிக்கிரத்தில் டிஸ்மிஸ் செய்ய முடியாது.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உள்ள பவர் தேர்தல் ஆணையருக்கும் உண்டு.. அவரை நீக்கனும்ன்னா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் கரப்பான்பூச்சி கூட்டம் போராடுது.. நீங்க நீக்க சொன்னா நீக்குறதுக்கு இது ஒன்னும் தனியார் கம்பெனி பதவி இல்லை.. அதிகாரம் மிக்க பதவி.. கை வைக்க முடியாது…

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகள் கூடத் தெரியாமல், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பு குறித்த தவறான கருத்துக்களைப் பரப்புபவர்களுக்கு எதிரான கண்டனக் குரல்கள் தற்போது வலுத்து வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பையும், நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இருக்கும் அதிகார வரம்பையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அபிஜித் தீப்கே போன்றவர்கள் பேசி வருவது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது எனச் சட்ட வல்லுநர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 324(5)-வது பிரிவின் கீழ், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையான பதவிப் பாதுகாப்பும், சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அதிகாரப்பூர்வ சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் தேர்தல் அமைப்பானது எந்தவொரு அரசியல் அழுத்தத்திற்கும் உட்படாமல், நியாயமாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவதை உறுதி செய்வதற்காகவே இந்த சிறப்புச் சட்டப் பாதுகாப்பு இந்திய அரசியலமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து, 2023-ஆம் ஆண்டின் தேர்தல் ஆணையச் சட்டப் பிரிவுகளின் படியும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு அரசியல் சாசனப் பிரிவு 361-ன் கீழ் தனிப்பட்ட சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளிலிருந்து முழுமையான சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளது பதவிச் சார்ந்த மற்றும் பணி தொடர்பான பாதுகாப்பாகும் . இந்த அடிப்படை வித்தியாசத்தைக் கூட உணராமல், குடியரசுத் தலைவரையும் பிரதமரையும் விடத் தேர்தல் ஆணையருக்கே அதிக பாதுகாப்பு இருக்கிறது என்று கூறுவது முற்றிலும் நகைச்சுவையான கூற்றாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்றால், உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவது போல நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு என்பதால், ஆளும் அரசோ அல்லது நிர்வாகத் துறையோ தன்னிச்சையாக ஆணையரின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் ஒரு பொறுப்பில் இருப்பவருக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டப் பாதுகாப்பைப் பற்றித் தெரியாமல் பேசுவது சட்ட அறியாமையின் வெளிப்பாடே ஆகும்.

அரசியல் லாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் அடிப்படைச் சட்ட அறிவுக் கூட இல்லாமல் பேசும் நபர்களைத் தான் மக்கள் “போஸ்டன் ஃபையிலியர்” என்று விமர்சிக்கின்றனர். வெளிநாடுகளில் படித்துவிட்டதாகப் பில்டப் கொடுத்துக்கொண்டு, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகளைக் கூடப் புரிந்துகொள்ளாமல் பொய்ப் பிரசாரம் செய்யும் இத்தகைய போலி அறிவாளிகளின் கூச்சல்களை மக்கள் இப்போது முற்றிலுமாகப் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர்.

தேர்தல் ஆணையத்தின் மீதும், நாட்டின் சட்ட அமைப்பின் மீதும் தேவையற்ற சந்தேகங்களை விதைத்து, மக்களைத் திசைதிருப்பப் பார்க்கும் இத்தகைய போலிப் போராளிகளின் முகத்திரை தற்போது அப்பட்டமாகக் கிழிந்துள்ளது. சட்டப் பூர்வமாகத் தனது கடமையைச் செய்யும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீதான அவதூறுகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்து வரும் நிலையில், ஆதாரமற்ற இத்தகைய கூற்றுகள் மீண்டும் மீண்டும் இவர்களது அறியாமையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

Leave a Comment