தொட்டுப் பாரு.. மொத்தமா முடிச்சிடுவோம்!.. அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த ‘மரண’ வார்னிங்..

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் இப்போது உலகப் போருக்கான அச்சாரமோ என அஞ்சும் அளவிற்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. “அமெரிக்கா எங்களை நோக்கி ஒரு கல்லை எறிந்தால் கூட, நாங்கள் மலையையே திருப்பி எறிவோம்” என்கிற ரீதியில் ஈரான் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் ‘அர்மாடா’ படை:
மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி அமெரிக்கா தனது பிரம்மாண்டமான ‘அர்மாடா’ (Armada) கப்பற்படையை அனுப்பி வருவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானில் நடந்து வரும் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் அணுசக்தி விவகாரங்களைக் காரணம் காட்டி அமெரிக்கா இந்த ராணுவக் குவிப்பில் ஈடுபட்டுள்ளது.

ஈரானின் ‘ஆல்-அவுட் வார்’ எச்சரிக்கை:
அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்குப் பதில் அளித்துள்ள ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர், “அமெரிக்கா எந்த வடிவத்தில் தாக்குதல் நடத்தினாலும் — அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரிய போர் முனையாக இருந்தாலும் சரி — அதை நாங்கள் ‘முழு வீச்சுப் போராகவே’ (All-out war) கருதுவோம். எங்களது பதிலடி சாத்தியமான மிகக் கடுமையான முறையில் இருக்கும். எங்களுடைய விரல்கள் இப்போது தாக்குதலுக்கான பொத்தானில் உள்ளன,” என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் அச்சம்:
ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அமெரிக்காவின் தலையீடு இந்தப் பிரச்சனையை உலகப் போராக மாற்றிவிடுமோ என்று உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மீதான எந்தத் தாக்குதலும் போர்ப் பிரகடனமாகவே கருதப்படும் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment