கோவையில் விஜய்யின் ரகசிய ‘மீட்டிங்’.. சந்திக்கப்போகும் அந்த முக்கிய புள்ளிகள் யார்?

ஈரோடு பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் முன், கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவுள்ள சில மணிநேர ஓய்வு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் ரகசியச் சந்திப்பு?

ஈரோடு பொதுக்கூட்டத்தில் அனல் பறக்கும் உரையை நிகழ்த்திய பிறகு, மாலை 4 மணி விமானத்தில் சென்னை திரும்புவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்கு முன்னதாக கோவையில் அவர் தங்கும் நேரத்தில், அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து விலகத் தயாராக இருக்கும் முக்கியப் புள்ளிகள் சிலரை விஜய் ரகசியமாகச் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

மாற்றத்தை நோக்கி கோவை:

சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த செங்கோட்டையன், மேற்கு மண்டலத்தில் விஜய்க்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று கோவையில் நடக்கும் இந்த ‘நிழல் சந்திப்புகள்’ எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கிய வியூகமாகப் பார்க்கப்படுகிறது.

நிர்வாகிகளுக்கு அறிவுரை:

ஏற்கனவே கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் தவெக தீவிர கவனம் செலுத்தி வருகிறது. லீ மெரிடியன் ஹோட்டலைச் சுற்றித் தொண்டர்கள் குவிய வாய்ப்புள்ளதால், காவல்துறையும் கட்சித் தன்னார்வலர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Leave a Comment