என் பேவரைட் லிஸ்ட்ல கருணாநிதிக்கு அப்புறம் இவர்தான்! – தவெக ஜெரால்டு சொன்ன ‘ஷாக்’ ரகசியம்!

பத்திரிகையாளர்களாகிய நம் வாழ்க்கையை அரசியல் தலைவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள் எனத் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள ரெட் பிக்ஸ் ஜெரால்ட் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது அரசியல் பயணம் மற்றும் விருப்பமான தலைவர்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தலைவர்கள்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறார்கள்!:
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசிய ஜெரால்ட், “என்னுடைய வாழ்க்கையில் ‘ஹாபி’ (Hobby) என்பதற்கு இடமே கிடையாது. நாம் ஒரு கோவிலுக்குப் போகலாம் அல்லது திருமணத்திற்குப் போகலாம் என்று நினைத்தால், வெளியே ஏதோ ஒரு பெரிய அரசியல் நிகழ்வோ அல்லது அசம்பாவிதமோ நடந்துவிடும். உடனே நாம் அங்கே ஓட வேண்டியிருக்கும். எனவே, நம் வாழ்க்கையை நாம் தீர்மானிப்பதில்லை; நம்மை ஆண்டுகொண்டிருக்கும் கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்,” என்றார்.

கருணாநிதி முதல் விஜய் வரை:
தனக்குப் பிடித்த அரசியல் தலைவர்கள் குறித்துப் பேசிய அவர், “பத்திரிகையாளராக இருந்தபோது கலைஞரின் (கருணாநிதி) அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும். செய்தியாளர்களை அவர் நடத்தும் விதம் அத்தனை சிறப்பாக இருக்கும். அவருக்குப் பிறகு இப்போது விஜய் அவர்களைச் சொல்வேன். இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை விஜய் எப்படித் தன் வசப்படுத்தினார் என்பது எனக்கு இப்போதும் ஒரு பெரிய ஆச்சரியம்தான்,” எனக் குறிப்பிட்டார்.

ஏன் தமிழக வெற்றி கழகம்?:
தமிழக அரசியலில் நிலவும் வெற்றிடத்தை நிரப்ப விஜய் ஒரு சரியான தேர்வாக இருப்பார் எனத் தான் நம்புவதாகவும், விஜய்யின் மக்கள் ஈர்ப்பு சக்தி தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பத்திரிகைத் துறையில் இருந்து அரசியலுக்குத் தாவிய ஜெரால்டின் இந்தப் பேச்சு, குறிப்பாக திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment