நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தான் அறிவுரை சொல்லும் இடத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதே சமயம், தனது அரசியல் எதிரி யார் என்பதையும் அவர் திட்டவட்டமாகப் பேசியுள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்துப் பேசிய கமல்ஹாசன், “விஜய்க்கு அறிவுரை சொல்லும் இடத்தில் நான் இல்லை. அரசியலில் அனுபவமே சிறந்த ஆசிரியர்” என்று குறிப்பிட்டார். இதன் மூலம், அரசியல் பாதையில் விஜய் தனது சொந்த அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்வார் என்றும்,
“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை நான் எதிரி என்று அழைக்க மாட்டேன்,” என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அரசியல் ரீதியாக வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும், அவரைத் தனிப்பட்ட முறையில் எதிரியாகப் பார்க்கவில்லை என்பதை இது காட்டுகிறது.
கமல்ஹாசன் தனது அரசியல் நிலைப்பாட்டையும், தனது முதன்மை எதிரி யார் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்தார். “எனது மிகப் பெரிய எதிரி எதுவென்றால், அது சாதி வெறிதான். சாதி வெறியைத்தான் நான் எனது மிகப் பெரிய எதிரியாகப் பார்க்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.
அவர் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி,
சாதி ரீதியிலான வேறுபாடுகளைக் களைந்து சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதையே தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது என்பதை அவரது இந்தப் பேச்சு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் தேர்தல் நேரத்தில் அதை எதிர்த்து அரசியல் செய்யும் விஜய் பற்றி இப்படி பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.