தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் அவரது ரசிகர்களின் செயல்பாடுகள் குறித்து முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
குடும்பத்துக்கே விஷம் !
சமீபகாலமாக விஜய் ரசிகர்கள் சிலர், “எங்கள் வீட்டில் இருப்பவர்கள் விஜய் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றால், அவர்களுக்குச் சாப்பாட்டில் விஷம் வைத்துவிடுவேன்” என்று பேசி வருகின்றனர். இதனைச் சுட்டிக்காட்டி ஆவேசமடைந்த கருணாஸ்,
“இந்த மாதிரிப் பேசுற ஆட்கள் உங்க வீட்டுக் காரங்களுக்கு மட்டும்தான் விஷம் கொடுப்பீங்களா அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் கொடுப்பீங்களா என்ற பயம் ஏற்படுகிறது. ஒரு நடிகரைத் தலைவராகப் பார்ப்பதில் தவறில்லை, ஆனால் அரசியல் புரிதலே இல்லாமல் இப்படி ஒரு அரவேக்காட்டுத் தனமாக இருப்பது ஆபத்தானது,” என எச்சரித்தார்.
41 பேரை சாகடித்தவர் விஜய்!
விஜய்யின் கடந்தகால அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “விஜய் ஏற்கனவே 41 பேரை சாகடித்தவர். இப்போது அவரை நம்பி வீட்டுக்கு இரண்டு பேரைச் சாகடிப்போம் என்று தொண்டர்கள் கூறுகிறார்கள். இப்படி இருந்தால் தமிழகத்தின் மக்கள் தொகை என்னவாகும்? ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர் பேரினம் இன்று இப்படி அறிவற்ற நிலையில் இருப்பதைப் பார்க்கும்போது மனது கஷ்டமாக இருக்கிறது,” என்றார்.
தற்குறி கூட்டங்கள் என விமர்சனம்!
கொள்கை ரீதியாக மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பவராக விஜய் இருந்தால் கவலையில்லை. ஆனால் எதுவுமே இல்லாமல், ‘எங்கள் வீட்டு ஆட்களை விட விஜய் தான் முக்கியம்’ என்று பேசுபவர்களிடம் ஆட்சி போனால், தமிழ்நாடே விஷம் குடித்துச் சாக வேண்டியதுதான். இதனால்தான் இவர்களை விமர்சகர்கள் ‘தற்குறி கூட்டங்கள்’ என்று அழைக்கிறார்கள்,” என மிகக் கடுமையாகச் சாடினார்.
பரபரக்கும் அரசியல் களம்!
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்தாலும், கருணாஸின் இந்த ‘விஷம்’ குறித்த விமர்சனம் மற்றும் ‘தற்குறி கூட்டம்’ என்ற வார்த்தை தவெக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.