“தகுதியைக் குறைத்து டாக்டர்களை உருவாக்கினால், நோயாளிகளின் கதி என்னாவது?” – NEET PG முதுநிலை மருத்துவத் தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைக் குறைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FAIMA) இன்று அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் மருத்துவத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வித் தரம் காலி:
கட் ஆஃப் மதிப்பெண்களைக் குறைப்பதன் மூலம் தகுதியற்றவர்கள் எளிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துவிடுவார்கள். இது இந்தியாவின் மருத்துவக் கல்வித் தரத்தை உலக அளவில் கேலிக்குரியதாக்கிவிடும்.
நோயாளிகளுக்கு ஆபத்து:
போதிய தகுதி இல்லாதவர்கள் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களாக மாறினால், அது நேரடியாக நோயாளிகளின் பாதுகாப்பை பாதிக்கும். ஒரு தவறான சிகிச்சை உயிரையே பறிக்கக்கூடும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மதிப்பெண் முறை கட்டாயம்:
பெயரளவிற்கு கட் ஆஃப் வைக்காமல், முறையான மதிப்பெண் அடிப்படையிலான கட் ஆஃப் (Score-based cutoff) முறையைக் கொண்டு வர வேண்டும்.
இறுதி எச்சரிக்கை:
மத்திய அரசு கட் ஆஃப் குறைப்பு குறித்த தனது அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசு பிடிவாதம் பிடித்தால், நாடு தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்கத் தயங்க மாட்டோம் என்றும் அந்த கடிதத்தில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
அரசு இறங்கி வருமா? அல்லது மருத்துவர்கள் வீதிக்கு வந்து போராடுவார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.