கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவி தொகையாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தபின் 2 வருடங்கள் கழித்து மகளிர் உதவி தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென மகளிர் உதவி தொகை பெற்று வந்த எல்லா பெண்களின் வங்கி கணக்குகளில் இன்று காலை வங்கி கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. தேர்தல் வந்துவிட்டால் மகளிர் உதவி தொகை கொடுக்க முடியாது.. ஏனெனில், தேர்தல் ஆணையம் அதற்கு தடை விதித்து விடும் என்பதால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து 3 ஆயிரம் மற்றும் கோடை விடுமுறை ஊக்கத்தொகை 2 ஆயிரம் என சேர்த்து மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவித்திருக்கிறார்.
மேலும், மூன்று மாதங்கள் மகளிர் தொகை முடக்கினால் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.. சுமார் ஒரு கோடி 31 லட்சம் பேர் பயனடைவார்கள் என முதல்வர் கூறியிருக்கிறார். அதோடு, திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை 2 ஆயிரமாக உயர்த்திக்கொடுக்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு மகளிர் உரிமை பெறும் பெண்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.