அதே கம்பீரம், அதே ஸ்டைல்… நியூ லுகில் விமான பயணிகளை கவர்ந்த தோனி… வைரலாகும் வீடியோ..!

விமானத்தில் கிரிக்கெட் வீரரான டோனி புது லுக்கில் வந்திருந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபல கிரிக்கெட் வீரரான டோனி கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் இல்லாமல் வெளியிலும் செய்யும் எளிமையான செயல்கள் காரணமாக பல நேரங்களில் அனைவரின் மனங்களையும் கவர்ந்துள்ளார். சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்த அவர் ரசிகர்களையும் சக பயணிகளையும் கவர்ந்திருக்கின்றார்.

ஒரு பயணி தான் பயணிக்கும் விமானத்தில் தோனி மற்றும் அவரது குடும்பத்தினர் ஏறுவதை அறிந்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார். அதனை படம் எடுக்க தொடங்கி இருக்கின்றார். வீடியோவில் டோனி கருப்பு நிற பேண்டும் பழுப்பு நிற டி-ஷர்ட அணிந்து கொண்டு மகளை முன்னே நடக்க விட்டு மனைவியுடன் விமான படிக்கட்டில் ஏறி வருகின்றார்.

உள்ளே நுழையும் போது விமான பயணிகளை பார்த்து அவர் கை அசைக்கிறார். அவரது ரசிகர்கள் சிலர் அவரிடம் கைகுலுக்க நீட்டியதும் அவரும் ஹை ஃபை செய்கின்றார். உடனே தனது இருக்கைக்கு சென்று அமராமல் தனது ரசிகர்களுடன் சில நிமிடம் நின்று உரையாற்றுகின்றார்.

மேலும் அவர் கையில் தண்ணீர் பாட்டிலும் முதுகில் தோல் பையும் இருந்தது. அனைவரிடமும் எதார்த்தமாக பேசும் அவரது செயல் அனைவரையும் கவர்ந்தது. இதனை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்த விமான பயணி ‘மகி தருணம்’ என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார். இது இதுவரைக்கும் 44 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை 4 லட்சம் பேர் இந்த வீடியோவை லைக் செய்து இருக்கிறார்கள்.

Leave a Comment