ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகை, இரு நாட்டு உறவுகளிலும் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. நேற்று நள்ளிரவு டெல்லி வந்தடைந்த அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி அளித்த பிரம்மாண்ட வரவேற்பு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது நெருங்கிய நண்பரான புதினை வரவேற்ற பிரதமர் மோடி, அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். விமானத்திலிருந்து இறங்கிய புதினைக் கட்டித்தழுவி தனது மகிழ்ச்சியைப் பிரதமர் வெளிப்படுத்தினார். மரபுகளைத் தாண்டி ஒரு உலகத் தலைவரைப் பிரதமரே நேரில் சென்று வரவேற்றது, இந்தியா-ரஷ்யா இடையிலான ஆழமான நட்புறவைக் காட்டுகிறது.
தமிழ்ப் பண்பாட்டுடன் இசை மழை இந்த வரவேற்பின் முக்கிய சிறப்பம்சமே அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்தான். புதினின் வருகையைக் கொண்டாடும் விதமாக, விமான நிலையத்திலேயே தமிழ்நாட்டின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக, தமிழ்ப் பெருமையை உலகுக்கு உணர்த்திய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி பிரத்யேகமாக அர்ப்பணித்தார் (Dedicate). தமிழ்ப் பண்பாட்டின் செழுமையையும், நவீன இசையின் துடிப்பையும் ஒருங்கே கண்டுகளித்த ரஷ்ய அதிபர், இந்த உபசரிப்பில் நெகிழ்ந்து போனார்.
“நண்பரை வரவேற்பதில் மகிழ்ச்சி” எனப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்திலும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.