இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டை அரசியல்வாதிகள் ஆண்டார்கள், அதிகாரிகள் ஆண்டார்கள்.. இனி தமிழகத்தை உங்களில் ஒருவர் ஆளப்போகிறார்.. மக்களே மக்களை ஆள போகிறார்கள்.. மாஸ் பஞ்ச் டயலாக்குகளை தெறிவிக்கவிடும் தவெகவினர்..

தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ஆம் ஆண்டு என்பது வெறும் ஒரு தேர்தல் ஆண்டாக மட்டும் இருக்கப்போவதில்லை; அது ஒரு மிகப்பெரிய அரசியல் சுனாமியின் சாட்சியாக அமையப்போகிறது. பல ஆண்டுகளாக தமிழகத்தை ஒரு வட்டத்திற்குள்ளேயே சுழல வைத்த திராவிட கோட்டைகளின் சுவர்கள் இப்போது பலவீனமடைய தொடங்கியுள்ளன.

நாங்கள் வெறும் ஓட்டுக்காக வரவில்லை, ஒவ்வொரு வீட்டோடும் நம்பிக்கையாக வந்திருக்கிறோம் என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ள புதிய அரசியல் சக்தி தவெக, மாற்றத்தை ஒரு வார்த்தையாக மட்டும் பார்க்காமல், மக்களின் எதிர்கால வாழ்க்கையாக மாற்ற துடிக்கின்றது. திராவிடக் கோட்டை என்று மார்தட்டிக்கொண்டிருப்பவர்களின் கணக்குகளை புள்ளிவிவரங்களால் அல்ல, மக்களின் உணர்ச்சிகரமான எழுச்சியால் தகர்க்க ஒரு “மக்கள் சுனாமி” தயாராகிவிட்டது.

பணம் கொடுத்து கொடுத்து கூட்டத்தை சேர்த்த பழைய அரசியல் கலாச்சாரம் இன்று செல்லாக்காசாகி போனது. ஒரு சிறு அழைப்பிற்காக கோடிக்கணக்கான மனங்கள் தன்னெழுச்சியாக ஒன்று சேர்வதுதான் இன்றைய தமிழகத்தின் புதுமை. அரசியல் சாணக்கியர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் போடும் கணக்குகளை தவிடுபொடியாக்கி, எதிர்பாராத வெற்றியை பெறுவதே இந்த தலைமுறையின் பாணியாக மாறியுள்ளது. “இத்தனை வருடம் தமிழ்நாட்டை அவர்கள் ஆண்டார்கள், இனிமேல் மக்கள் ஆளப்போகிறார்கள்” என்ற முழக்கம் உண்மையான ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்கிறது. யார் வருகிறார்கள் என்று வேடிக்கை பார்த்த காலம் முடிந்து, மற்றவர்கள் வேடிக்கை பார்க்கும் அளவிற்கு ஒரு பிரம்மாண்ட அரசியல் நகர்வு தொடங்கிவிட்டது.

போலியான கருத்துக்கணிப்பு புள்ளிவிவரங்கள் பழைய அரசியல்வாதிகளின் கையில் இருக்கலாம், ஆனால் மாற்றத்தை விரும்பும் எழுச்சிப்படை மக்கள் பின்னால் அணிவகுத்து நிற்கிறது. வெறும் சித்தாந்தம் பேசி மக்களை ஏமாற்றிய காலம் மறைந்து, இனி சேவையின் வேகம் மட்டுமே அரசியலை தீர்மானிக்கும். தமிழக அரசியலில் நீண்டகாலமாக ஒலித்துக்கொண்டிருந்த பழைய பாடல்களுக்கு பதில், இனி புதிய ராகமும், புதிய மேளமும் அதிரப்போகின்றன. களம் தயாராகிவிட்டது, 2026-ல் வேட்டை ஆரம்பமாக போகிறது. இது வெறும் ஆட்சி மாற்றமல்ல, தமிழகத்தின் புதிய விடியலுக்கான அடையாளம்.

Leave a Comment