சமீபத்தில் தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனா “எம்ஜிஆர் போல ரஜினி வருவார் என்று எதிர்பார்த்தார்கள், ஆனால் திமுக அவரை முடக்கிவிட்டது” என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினிகாந்த், “காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்று ஒரு ‘சித்தர் வாக்கு’ போன்ற ட்வீட்டை பதிவிட்டார். ரஜினியின் இந்த மென்மையான ஆனால் வலிமையான பதில், வரும் தேர்தலில் மக்களே இதற்கு பதில் சொல்வார்கள் என்பதை குறிப்பதாக ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
ரஜினிகாந்த் பொதுவாக தன்னை விமர்சனம் செய்பவர்களை கண்டுகொள்ள மாட்டார். ஆனால் ஆதவ் அர்ஜூனா சொன்ன விஷயத்தால் சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் கொந்தளித்துள்ள நிலையில், பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர் அந்த ட்வீட்டில் விஜய்க்கோ, ஆதவ் அர்ஜூனனுக்கோ பதில் சொல்லாமல், தனக்கு ஆதரவாக பேசிய அனைவரின் பெயரை குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இவ்வளவு பேர் நீ சொன்னதை தவறு என்று சொல்லியிருக்கிறார்கள் என்று விஜய்க்கும் அவர் மறைமுகமாக எடுத்துரைத்துள்ளார்.
காலம் பேசாது.. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.. என்பதற்கு உண்மையான அர்த்தம், நீ என்னை பத்தி என்ன வேணும்னாலும் பேசிக்கோ, நான் அதற்கு பதில் சொல்ல மாட்டேன், ஆனால் தேர்தல் முடிவு உனக்கு பதிலாக கிடைக்கும் என்பதுதான்.. தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் நேரத்தில் ரஜினியை சீண்டியவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. இந்த தேவையில்லாத சர்ச்சைகள் காரணமாக ரஜினி ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக விஜய்க்கு ஓட்டு போட வாய்ப்பில்லை. ஒரு புதிய கட்சி ஒரு சீனியர் நடிகர் மற்றும் அரசியலை கூர்ந்து கவனிக்கும் ஒருவரை இப்படி பேசாமல் தவிர்த்திருக்கலாம் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.