அந்த ஒரு விஷயத்தை மட்டும் விஜய் செஞ்சா.. வெற்றி நிச்சயம்.. நடிகை ரோஜாவின் ‘நச்’ அட்வைஸ்!

”ஒரு முதலமைச்சர் மாநாடு நடத்தவே அரசு இயந்திரமே விடிய விடிய வேலை செய்ய வேண்டும். ஆனால் எந்த அதிகார பலமும் இல்லாமல் விஜய் ஈரோடு பொது கூட்டத்தை எப்படி சாத்தியமாக்கினார்?” என நடிகை ரோஜா வியப்பு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு மற்றும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து தனது பார்வையை வெளிப்படுத்தினார்.

விஜய்யின் விஸ்வரூபம்:
விஜய்யின் மாநாடு குறித்துப் பேசிய அவர், “அரசு தரப்பில் ஒரு முதலமைச்சர் மாநாடு நடத்தினால் அதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், எஸ்.பி மற்றும் கலெக்டர் என ஒரு படையே விடிய விடிய வேலை செய்ய வேண்டும். ஆனால், தமிழக வெற்றி கழகத்தில் பெரிய அரசியல் பின்புலம் கொண்ட ஆட்கள் யாரும் இல்லாத போதும், விஜய் இவ்வளவு பெரிய கூட்டத்தை எப்படித் திரட்டினார், எப்படி ஒருங்கிணைத்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது,” என்றார்.

மக்கள் எதிர்பார்ப்பு என்ன?:
தொடர்ந்து பேசிய ரோஜா, “விஜய்யிடம் மக்கள் ஒரு பெரிய விஷயத்தை எதிர்பார்க்கிறார்கள். மக்களின் அந்த எதிர்பார்ப்பு என்ன என்பதை விஜய் சரியாக உணர்ந்து வழங்கினால், அவருக்கு மக்கள் ஆதரவு என்பது என்றென்றும் நீடிக்கும். அதனை அவர் சரியாகச் செய்வார் என நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டார்.

நிச்சயமான வெற்றி!
மக்களின் நாடித் துடிப்பை அறிந்து விஜய் செயல்பட்டால் அவரது அரசியல் வெற்றி என்பது உறுதி என்றும், விஜய்யின் இந்த அசுர வளர்ச்சி மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றும் ரோஜா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment