தமிழக அரசியல் களத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஒவ்வொரு அசைவும் பெரும் விவாதங்களை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, ரஜினிகாந்த் குறித்து தெரிவித்த கருத்துக்கள் ஒரு மிகப்பெரிய அரசியல் புயலை கிளப்பியுள்ளன. தொடக்கத்தில் ஆதவ் அர்ஜுனா ரஜினியை ஒருமுறை மட்டுமே விமர்சித்ததாக பார்க்கப்பட்டாலும், அதன் பிறகு நடந்த அரசியல் நகர்வுகள் ரஜினியின் பிம்பத்திற்கு ஒருவிதமான தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு துருவங்களும் ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு, மறைமுகமாக அவரை அரசியலுக்குள் இழுத்து திரும்ப திரும்ப அவமதிக்கும் போக்கை கடைப்பிடித்ததாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ரஜினியின் ரசிகர் மன்ற வாக்கு வங்கியை தங்களுக்குச் சாதகமாக திருப்பப் போட்டாப்போட்டி போடுகின்றன. ஆதவ் அர்ஜுனாவின் கருத்தை கண்டிப்பதாகக் கூறிக்கொண்டு, ரஜினியை மிரட்டலுக்கு பயந்தவர் என்பது போன்ற பிம்பத்தை அவை உருவாக்கி வருகின்றன. ரஜினிக்கு திராவிட கட்சிகள் வக்காலத்து வாங்குவது என்பது அவரை பாதுகாப்பது போல தெரிந்தாலும், உண்மையில் அவர் தனது சொந்த கருத்தைக்கூட சொல்ல முடியாத ஒரு நிலையில் இருப்பதாகவே சித்தரிக்கிறது. ஒரு மாபெரும் ஆளுமையை சிறு கட்சிகளின் விமர்சனங்களில் இருந்து தற்காப்பதாக காட்டி கொள்வது, மறைமுகமாக அவரது வலிமையை குறைத்து மதிப்பிடும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து வெளியான விளக்கம் என்பது அவரே தன்னை தானே அவமதித்து கொண்ட ஒரு நிகழ்வாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது. பொதுவாக இது போன்ற விமர்சனங்களை கடந்து செல்லும் ரஜினி, இந்த முறை விளக்கம் அளிக்க முன்வந்தது அவரது வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டுள்ளது. ரஜினியை புண்படுத்தும் நோக்கத்தில் நான் பேசவில்லை” என்று ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்த பின்னர் இந்த விஷயத்தை ரஜினி அப்படியே விட்டிருக்கலாம், அதைவிட்டுவிட்டு காலம் பேசாது. ஆனால்… காலம் அனைத்திற்கும் பதிலளிக்கும் என்று கூறியது ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள ஒருவர், ஒரு சிறிய அரசியல் விமர்சனத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ப் பதிலளிப்பது தேவையில்லாத ஒன்றாக கருதப்படுகிறது.
மிக முக்கியமாக, ரஜினிகாந்த் வெளியிட்ட இந்த அறிக்கை அல்லது விளக்கம் என்பது அவரது சொந்த விருப்பத்தின் பேரில் வந்ததா அல்லது திமுகவின் மிரட்டலால் வந்ததா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் வலுவாக எழுந்துள்ளது. திமுகவுடன் ரஜினிக்கு நீண்டகால நட்புறவு இருந்தாலும், தற்போதைய அரசியல் சூழலில் ஆளும் கட்சியின் அழுத்தத்திற்கு அவர் பணிந்து போகிறாரோ என்ற அச்சம் அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் முக்கிய நிர்வாகி என்பதால், கூட்டணியில் விரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக ரஜினியை வைத்து ஒரு சமாதான அறிக்கையை திமுக தரப்பு பெற முயற்சித்திருக்கலாம் என்று விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
அரசியல் விமர்சகர்களின் பார்வையில், திராவிட கட்சிகள் ரஜினியை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி வருகின்றன. ரஜினிக்கு ஆதரவு என்ற போர்வையில், அவரை தங்களது அரசியல் லாபத்திற்காக ஒவ்வொரு முறையும் மேடை ஏற்றி அழகு பார்க்கின்றன. ஆனால், அதே வேளையில் அவர் ஒரு சுதந்திரமான கருத்தை தெரிவிக்கும் போதெல்லாம், அவரை சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கி மௌனமாக்குகின்றன. இன்று ரஜினிக்கு ஏற்பட்டுள்ள இந்த தர்மசங்கடம், அவர் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்த பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. தனது புகழுக்கும் கௌரவத்திற்கும் களங்கம் ஏற்படக்கூடாது என்று நினைக்கும் ரஜினி, இத்தகைய அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்வது வேதனையானது.
இறுதியாக, ரஜினிகாந்த் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதே அவருக்கு பெருமை சேர்த்திருக்கும். ஆனால், மாறிவரும் அரசியல் சூழலில் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை மீறி அவரால் செயல்பட முடியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. ரஜினிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிக்கொண்டு திமுகவும் அதிமுகவும் செய்த அரசியல் நாடகம், உண்மையில் ஆதவ் அர்ஜுனா செய்த அவமதிப்பை விட பல மடங்கு பெரியது. இனி வரும் காலங்களில் ரஜினி இத்தகைய அரசியல் பொறிகளில் சிக்காமல், தனது கலை பயணத்தில் மட்டும் கவனம் செலுத்துவதே அவரது ரசிகர்களுக்கு நிம்மதியைத் தரும். திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து ரஜினி எப்போது விடுபடுவார் என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.