மக்கள் நினைச்சா யாராலும் தடுக்க முடியாது.. விஜய்க்கு ஆதரவா செங்கோட்டையன் கொடுத்த பில்டப்..

சினிமாவுல பாக்குற விஜய் வேற, நேர்ல பாக்குற விஜய் வேற.. அவர் கிட்ட நான் எம்.ஜி.ஆரை பாக்குறேன்!” – இப்படி ஒரு வெடியைப் போட்டு ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

அதிமுக-வில் 50 வருஷம் இருந்த அனுபவத்தை அப்படியே தவெக பக்கம் திருப்பிய அவர், விஜய் பற்றி பேசிய உருக்கமான மற்றும் ஆவேசமான தகவல்கள் இதோ,

எம்.ஜி.ஆருக்கு வந்த அதே விமர்சனம்!

“எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிச்சப்போ, இது 100 நாள் கூட தாங்காது, சினிமா படம் மாதிரி பிளாப் ஆயிடும்னு சொன்னாங்க. ஆனா அவர் சாகுற வரைக்கும் முதலமைச்சரா இருந்து சாதனை படைச்சாரு. இப்போ விஜய்க்கும் அதே விமர்சனம் வருது.. ஆனா விஜய்யோட பயணமும் எம்.ஜி.ஆர் மாதிரி பெரிய சரித்திரத்தை படைக்கும்” என அடித்துச் சொல்லியிருக்கிறார் செங்கோட்டையன்.

நிஜ வாழ்க்கையிலும் அவர் ஹீரோதான்!

திரையில் நடிப்பதை வைத்து மட்டும் விஜயை எடை போடாதீர்கள் என எச்சரிக்கும் அவர், “விஜய் கூட பழகிப் பார்த்தா தான் தெரியும், அவருக்கு மக்கள் மேல இருக்குற அக்கறை என்னன்னு. மக்களுக்காகப் பணியாற்றணும்ங்கிற அவரோட துடிப்பு அப்படியே புரட்சித்தலைவர் மாதிரியே இருக்கு” என சிலிர்க்க வைக்கிறார்.

மக்கள் முடிவு பண்ணிட்டா யாரும் தடுக்க முடியாது!

தற்போதைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு மறைமுகமாக செக் வைத்த செங்கோட்டையன், “மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்காங்க. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி காலத்துல இருந்த அந்த அன்பு இப்போ இருக்குற ஆட்சியாளர்கள்கிட்ட இல்லைன்னு மக்கள் ஃபீல் பண்றாங்க. மக்கள் ஒருத்தரை மனசார விரும்பிட்டா, அவங்களை ஆட்சிக் கட்டில்ல உட்கார வைக்கிறதுல எந்த சக்தியாலயும் தடையா இருக்க முடியாது” என அதிரடி காட்டினார்.

2026-ல் செம வேட்டை இருக்கு!

“விஜய்யை வெறும் நடிகனா பார்க்காம, ஒரு மக்கள் தலைவனா மக்கள் ஏத்துக்கிட்டாங்க. வரும் 2026 தேர்தல் தமிழக அரசியல்ல ஒரு மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட்டா இருக்கும். விஜய்யை முதல்வராக்க நான் ஓயாமல் உழைப்பேன்” என தவெக தொண்டர்களுக்கு செம பூஸ்ட் கொடுத்திருக்கிறார் இந்த மூத்த அரசியல்வாதி.

Leave a Comment