உழைப்பு உங்களுக்கு… வெற்றி அவருக்கா?.. விஜயின் பார்ட் டைம் பாலிடிக்ஸ் தோலுரிப்பு..

2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) தலைவர் விஜய் நேற்று நடத்திய பொதுக்கூட்டம், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக, அவர் முன்வைக்கும் வாக்கு சதவீத கணக்குகளும், அவரது செயல்பாடுகளும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

வாய் அரசியலா? சதவீத மர்மம்!
ஆரம்பத்தில் தங்களுக்கு 22 சதவீத வாக்குகள் இருப்பதாகக் கூறிவந்த விஜய் தரப்பு, நேற்று நடந்த கூட்டத்தில் அது 40 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தது விமர்சகர்களை அதிர வைத்துள்ளது. “அடுத்த கூட்டத்தில் 60% என்று சொல்வார்களோ?” எனக் கேள்வி எழுப்பும் அரசியல் விமர்சகர்கள், இப்படி இருந்தால் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமே இல்லை, நேரடியாக விஜய்யை வெற்றியாளர் என அறிவித்துவிடலாம் என கிண்டல் செய்கின்றனர்.

145 நாட்களில் 15 முறை மட்டுமே தரிசனம்!
விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்து முன்வைக்கப்படும் முக்கிய விமர்சனம், அவரது ‘பார்ட்-டைம்’ (Part-time) அணுகுமுறை,

செப்டம்பர் 13 திருச்சி மரக்கடையில் முதல் பிரச்சாரம், ஜனவரி 25 வரை கடந்த 145 நாட்களில் வெறும் 15 முறை மட்டுமே அவர் பொதுவெளியில் தோன்றி இருக்கிறார். சொந்தப் படத்தையே தடையின்றி ரிலீஸ் செய்ய முடியாத சூழலில் இருக்கும் ஒருவர், எதார்த்தத்தை உணராமல் இவ்வளவு பெரிய ‘பில்டப்’ கொடுப்பது ஏன்? என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நான் உழைக்கமாட்டேன்… நீங்கதான் உழைக்கணும்:
நேற்றைய கூட்டத்தில் விஜய் பேசிய விதம், தொண்டர்களிடம் வேலை வாங்கும் எஜமானர் தோரணையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. “நான் கட்சிக்காக உழைக்கப்போவதில்லை, நீங்கள் தான் உழைக்க வேண்டும்” என்று அவர் பேசியது, தொண்டர்களின் உழைப்பைத் திருடும் முயற்சியோ என ஐயப்பாட்டை உருவாக்கியுள்ளது. மேலும், தொண்டர்கள் கட்சி மாறிவிடக்கூடாது என்பதற்காக அவர் வாங்கிய ‘சத்திய பிரமாணம்’ ஒருவித பயத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

ஊழல் எதிர்ப்பு – ஒரு முரண்பாடு?
மற்ற கட்சிகளில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர்களைத் தன் கட்சியில் சேர்த்துக்கொண்டு, “ஊழலை ஒழிப்பேன்” என்று விஜய் கூறுவது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேர்தல் சீட் அறிவிக்கும்போது உட்கட்சியில் பெரிய வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மற்ற கட்சி ‘ரிஜெக்ட்’ செய்தவர்களை வைத்துக்கொண்டு மாற்றத்தை எப்படிக் கொண்டு வருவார்?

தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் எனப் பலமான கட்சிகள் இருக்கும்போது, விஜய்யின் இந்தத் தரவு (Data) இல்லாத அரசியல் கணக்குகள் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment