மாற்றம்ன்னா என்ன என்னன்னு கேட்டீங்களே.. இதுதான் மாற்றம்.. திமுக ஆட்சியில புகார் கொடுத்தா, அந்த புகார் என்னன்னு விசாரிக்கவே 4 மாசம் ஆகும்.. ஆனால் தவெக ஆட்சியில் புகார் கொடுத்த 4 மணி நேரத்துல அதை சரி செஞ்சிடுவாங்க.. ஒரு பெண்ணின் நெகிழ்ச்சியான அனுபவம்.. இப்படியே போனா தமிழ்நாடு எங்கேயோ போயிடும்…

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுத் துறைகளின் செயல்பாடுகளிலும், மக்கள் அளிக்கும் புகார்களுக்குத் தீர்வு காண்பதிலும் மிகக் குறிப்பிடத்தக்க ஒரு நிர்வாக மாற்றம் ஏற்பட்டுள்ளது தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் பரவலான பாராட்டை பெற்று வருகிறது. முன்னதாக, கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை போன்ற மாநகர பகுதிகளில் குடியிருப்பு வாசி ஒருவர் தனது வீட்டின் வாசலில் அண்டை வீட்டார் கொட்டிய அசைவ கழிவுகள் மற்றும் குப்பைகளை நாய் சிதறிவிட்டதால் ஏற்பட்ட கடுமையான துர்நாற்றம் குறித்து கார்ப்பரேஷன் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் ஆன்லைனில் புகாரை பதிவு செய்திருந்தார். அப்போது நிலவிய நிர்வாக தேக்கநிலை காரணமாக, பாதிக்கப்பட்ட நபரே சொந்தமாக ஆட்களை வைத்து பணத்தை கொடுத்து உடனடியாக அந்த இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆச்சரியப்படும் விதமாக, கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட அந்த புகாருக்கு பல மாதங்கள் கழித்து, அதாவது ஏப்ரல் மாதத்தில் அந்த நபர் வெளிநாட்டில் இருந்தபோது முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து முதல் அழைப்பு வந்துள்ளது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து வந்த அந்த அழைப்பில், புகார் குறித்து கேட்கப்பட்டபோது, “நானே ஆட்களை வைத்து சுத்தம் செய்துவிட்டேன், புகாரை முடித்துக்கொள்ளுங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், அந்த புகார் முழுமையாக மூடப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் மாநகராட்சி தரப்பிலிருந்து மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு சம்பந்தப்பட்ட நபருக்கு வந்துள்ளது.

அதிகாரிகள் தங்களது தரப்பு விளக்கத்தைக் கூறி, பழைய புகார் இன்னும் அதிகாரப்பூர்வமாக மூடப்படவில்லை என்பதை தெரிவித்ததுடன், ஏதேனும் குறைகள் இருந்தால் நேரடியாக தொடர்புகொள்ளுமாறு ஒரு பிரத்யேக எண்களையும் வழங்கியுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அந்த குடியிருப்பு வாசி, தங்களது பகுதியில் தெருக்களை பெருக்கும் தொழிலாளர்கள், சாலையோர மண் முழுவதையும் நடைபாதைக்கு அருகிலும், வீட்டின் வாசலில் உள்ள மேன்ஹோல் மீதும் தள்ளிவிடுவதாக புதிய புகார் ஒன்றை முன்வைத்துள்ளார். இதனால் கடற்கரை மணல் போல் அப்பகுதி முழுக்க மண் குவிந்து, இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியாமலும், வண்டிகள் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைக்கவனமாக் கேட்டறிந்த மாநகராட்சி அதிகாரிகள், உடனடியாக ஆட்களை அனுப்பி அந்த மண்ணையெல்லாம் மூட்டைகளில் கட்டி, லாரிகள் மூலம் அப்புறப்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். வழக்கமாக இது போன்ற புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்று அந்த நபர் எதிர்பார்த்த நிலையில், நேற்று மாலை 5 மணிக்கெல்லாம் “உங்களது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்று அவரது மொபைல் எண்ணுக்கு அதிகாரப்பூர்வ மெசேஜ் வந்துள்ளது. புதிய அரசின் இந்த துரித நடவடிக்கை, சொன்னதோடு மட்டுமில்லாமல் அடுத்த சில மணி நேரங்களிலேயே களத்தில் எதிரொலிக்க தொடங்கியதுதான் தற்போதைய மிகப்பெரிய நிர்வாக மாற்றமாகக் கருதப்படுகிறது.

அதன்படி, இன்று காலை 8.30 மணிக்கெல்லாம் சம்பந்தப்பட்ட தெருவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரண்டு, ரோடு முழுக்கக் குவிந்திருந்த மண்ணை அசுர வேகத்தில் போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர். புகார் கொடுக்கப்பட்டது ஒரு குறிப்பிட்ட வீட்டின் வாசலுக்கு மட்டும்தான் என்றாலும், அந்தப் பகுதி முழுவதும் அங்கங்கே மண் தேங்கியிருப்பதாகக் கூறப்பட்டதை ஏற்று, ஒட்டுமொத்த சாலையையும் தூய்மைப்படுத்தும் பணி தற்பொழுது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக தங்களது பகுதியில் இப்படி ஒரு முழுமையான, தீவிரமான தூய்மைப் பணியை மக்கள் பார்த்ததே இல்லை என்று அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடனும் நெகிழ்ச்சியுடனும் தெரிவித்துள்ளனர்.

சமூகத்தில் ஏதேனும் ஒரு தவறு நடந்தால் அதனை உடனடியாக இணையத்தில் வைரல் செய்யும் நாம், இது போன்ற அரசு துறைகளின் மிகச்சிறந்த மற்றும் வேகமான நற்பணிகளையும் உலகறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த உண்மைச் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 100 சதவீதம் தற்பொழுது நிர்வாகத்தில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், மக்கள் எதிர்பார்க்கும் உண்மையான மக்கள் நல அரசு இதுதான் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே போன்ற வேகமான மற்றும் பாசிட்டிவான செயல்பாடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடர்ந்து நீடித்தால், நம்முடைய தமிழகம் வளர்ச்சியில் இந்தியாவிலேயே மிக உன்னதமான இடத்திற்குச் சென்றுவிடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை

Leave a Comment