விஜய் விடுத்த சவால்! .. “திமுகவின் ஏமாற்று வேலை புதுச்சேரி மக்களுக்கல்ல”.. தமிழ்நாட்டு தேர்தலைச் சுட்டிக்காட்டி பகிரங்கப் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரி உப்பளம் பொதுக்கூட்ட மேடையில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவை நேரடியாக விமர்சித்தும், புதுச்சேரி மக்களிடம் அவர்களை நம்ப வேண்டாம் என்று கோரியும் பேசியது, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மக்களுக்கு உரையாற்றிய விஜய், நேரடியாகத் தமிழ்நாட்டைச் சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

திமுக மீது கடுமையான தாக்குதல் :
“புதுச்சேரி மக்களே, நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். இந்தத் தமிழ்நாட்டில் ஆட்சி செய்கிற திமுகவை மட்டும் நம்பாதீங்க. அவங்களுக்கு உங்களை நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் வேலையே.” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

விஜய் தொடர்ந்து பேசுகையில், புதுச்சேரி ஆளும் கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல், “புதுச்சேரியைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் இருக்கிற திமுக அரசு கத்துக்கிட்டா நல்லா இருக்கும்.” என்று கருத்துத் தெரிவித்தார்.

திமுக அரசு இந்த விமர்சனங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுமா என்ற கேள்விக்கு அவரே பதிலளித்தார். “ஆனா அவங்க கத்துக்க மாட்டாங்க. பரவாயில்லை வரப்போற தேர்தல்ல 100 சதவீதம் கத்துக்குவாங்க. அத நம்ம மக்கள் பார்த்துக்குவாங்க.” என்று உறுதியுடன் கூறினார். இதன் மூலம், தமிழ்நாட்டில் வரவிருக்கும் தேர்தல்களில் மக்கள் திமுகவுக்குப் பாடம் புகட்டுவார்கள் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
விஜய் தனது 11 நிமிடப் பேச்சில் மத்திய அரசையும் திமுகவையும் மட்டுமே விமர்சித்தார்.

விஜய்யின் இந்தப் பேச்சு, அவர் தமிழ்நாடு தேர்தல்களுக்கு முன்னதாக, திமுகவை மையப்படுத்தி தனது அரசியல் பரப்புரையைத் தீவிரப்படுத்தியதைக் காட்டுவதுடன், மாநில எல்லைகளைக் கடந்தும் தனது அரசியல் முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளார் என்பதையும் உணர்த்துகிறது.

Leave a Comment