அசிங்கமா பேச எனக்கும் தெரியும்.. வேணாம்!.. திமுக நிர்வாகிகளுக்கு விஜய்யின் மரண அடி..

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஈரோடு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுக-வை நோக்கித் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, தனிநபர் விமர்சனங்களில் ஈடுபடும் திமுக நிர்வாகிகளுக்கு அவர் விடுத்த எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஒரு ‘தீய சக்தி’ – விஜய் ஆக்ரோஷம்:

மேடையில் பேசிய விஜய், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, “திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி” என்று முழங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது இந்த இரு சக்திகளுக்கும் இடையிலான போராட்டமாக அமையும் என அவர் உரக்க கூறினார்.

அசிங்கமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி:

திமுக-வைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக, அசிங்க அசிங்கமாகப் பேசுவதுதான் அரசியல் என்று நினைக்கிறார்கள். அப்படிப் பேசுவதுதான் அரசியல் என்றால், அந்த அரசியல் எனக்கு வராது என்று சில பேர் நம்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்… அப்படிப் பேச வராது என்று நினைக்காதீர்கள், உங்களை விட அது எனக்கு நல்லாவே வரும்! ஆனால், வேண்டாம் என்று விட்டு வைத்திருக்கிறேன். அப்புறம் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?” என்று ஆவேசமாக வினவினார்.

நாகரீக அரசியலே லட்சியம்:

தான் ஒரு மாற்றத்திற்காக அரசியலுக்கு வந்திருப்பதாகக் குறிப்பிட்ட விஜய், “வசைபாடுவதும், தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதும் எனது நோக்கம் அல்ல. என் தொண்டர்களும் அதே கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஆனால், எங்களைக் கேலி செய்கிறோம் என்ற பெயரில் மக்களின் கௌரவத்தைச் சீண்டினால் இந்த விஜய் சும்மா இருக்க மாட்டான்” என்று எச்சரித்தார்.

ஈரோடு மேடையில் புதிய பரிமாணம்:

விஜய் மேடை ஏறுவதற்கு முன்பாக, தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவருக்கு ‘புரட்சித் தளபதி’ என்ற பட்டத்தைச் சூட்டினார். மேலும், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தைத் தொண்டர்கள் முத்த மழையில் நனைய வைத்த சம்பவமும் ஈரோடு மைதானத்தை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

Leave a Comment