விஜய் கட்சிக்கு செக்.. ஈரோடு கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.. கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு..

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே நடைபெறுவதாக இருந்த நிலையில், அந்தக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி விஜயபுரி அம்மன் கோவில் நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளது.

கோவில் நிர்வாகத்தின் இந்தக் கடிதம், அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தடைக்கான காரணம் என்ன? :

த.வெ.க. பொதுக்கூட்டத்திற்காக அனுமதி கோரப்பட்ட இடம் விஜயபுரி அம்மன் கோயிலுக்குச் சொந்தமானது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவிலுக்குச் சொந்தமான அந்த இடத்தில், தமிழக வெற்றிக் கழகத்திற்கோ அல்லது பிற அரசியல் கட்சிகளுக்கோ பொதுக் கூட்டங்கள் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, கோயில் நிர்வாகத்தின் இந்தக் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கவனத்தில் எடுத்துள்ளதால், திட்டமிட்டபடி அங்கு பொதுக்கூட்டம் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டங்களுக்கு பல்வேறு இடங்களில் காவல்துறை மற்றும் நிர்வாக ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கோவில் நிர்வாகம் மூலம் தடை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment