அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான நட்பு இப்போ “நட்பு” என்ற நிலையைக் கடந்து, ஒரு மிகப்பெரிய “ஈகோ” போராக மாறியிருக்கு. “அமெரிக்கா நினைச்சா எதையும் செய்யும்”னு ட்ரம்ப் சொல்ல, “பெரிய நாடுகள் மிரட்டுறதை ஏத்துக்க முடியாது”னு கனடா பதிலடி கொடுக்க, இப்போ மேட்டர் ரொம்ப சீரியஸ் ஆகியிருக்கு.
அமெரிக்காவை சீண்டிய கனடா பிரதமர்:
சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி, “உலகத்துல இப்போ இருக்கிற விதிகள் எல்லாம் உடைஞ்சு போச்சு. பெரிய நாடுகள் தங்களோட பொருளாதார பலத்தை மத்த நாடுகளை மிரட்டுறதுக்கான ஆயுதமா பயன்படுத்துறாங்க. சின்ன நாடுகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து இதைக் கேள்வி கேட்கணும்”னு ஆவேசமா பேசினாரு. இது ட்ரம்ப் காதுக்கு போக, மனுஷன் செம கடுப்பாயிட்டாரு.
ட்ரம்ப்பின் மரண வெயிட் பதிலடி:
அதே மேடையில பேசின ட்ரம்ப், ட்ரூடோவுக்கு (மற்றும் தற்போதைய பிரதமர் மார்க் கார்னிக்கு) பதிலடி கொடுக்கும் விதமா, “அமெரிக்கா இருக்கறதால தான் கனடாவே இன்னைக்கு வரைக்கும் உயிரோட இருக்குங்கிறதை மறந்துடாதீங்க. அமெரிக்கா கிட்ட இருந்து ஏகப்பட்ட சலுகைகளை இலவசமா வாங்கி அனுபவிக்கிறீங்க. ஆனா, அந்த நன்றி உணர்வு கொஞ்சம் கூட இல்லாம எங்களுக்கே எதிரா பேசுறீங்க”ன்னு ரொம்பக் காட்டமா பேசி இருக்காரு.
நன்றி கெட்ட நாடா கனடா?
ட்ரம்ப் மேலும் பேசும்போது, “கனடாவுக்கு நாங்க எவ்வளவோ இலவச சலுகைகளை (Freebies) கொடுக்கிறோம். ஆனா அவங்க அதை ஒரு நாளும் மதிச்சது இல்ல. அடுத்த தடவை பேசும்போது யோசிச்சு பேசுங்க. நாங்க இல்லன்னா கனடான்ற நாடே இருக்காது”னு ஒரு மெகா சைஸ் குண்டைத் தூக்கிப் போட்டிருக்காரு.
உலக நாடுகள் அதிர்ச்சி:
இந்த உரசல் இதோட நிக்காம, “கிரீன்லாந்து” விவகாரத்திலும் அமெரிக்காவை கனடா எதிர்ப்பதால், ட்ரம்ப் கனடா மீது கடும் பொருளாதாரத் தடைகளை (Tariffs) விதிக்கப் போவதாகவும் எச்சரிச்சிருக்காரு. இதனால அமெரிக்கா-கனடா பார்டர்ல இப்போ ஒரு விதமான பதற்றம் நிலவி வருது.
மொத்தத்துல, “வளர்த்த கடா மார்ல பாயுற கதையா” கனடா நடந்துகுதுன்னு ட்ரம்ப் கொதிச்சுப்போய் இருக்காரு!