நான் மட்டும் இல்லன்னா இந்தியா-பாகிஸ்தான் காலி.. ஒரே போன்ல போரையே நிறுத்தினேன்!.. ட்ரம்ப் அதிரடி அட்ராசிட்டி!

உலக நாடுகளின் ‘பெரியண்ணன்’ எனச் சொல்லிக்கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் ஒருமுறை உலகையே தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல், ரத்தத்தை உறைய வைக்கும் ரகம்.

அணு ஆயுதம் பாய்ந்திருக்கும்!
சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய ட்ரம்ப், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில ஒரு மிகப்பெரிய போர் வெடிக்கிறதுக்கு எல்லா வாய்ப்பும் இருந்தது. நான் மட்டும் அன்னைக்கு தலையிட்டு அந்தப் போரை நிறுத்தி வைக்கலைன்னா, ரெண்டு நாடுகளும் ஒருத்தர் மேல ஒருத்தர் அணு ஆயுதத்தை (Nuclear Weapons) வீசி இருப்பாங்க. நிலைமை அந்தளவுக்கு உச்சக்கட்டத்துல இருந்தது,” எனப் பகீர் கிளப்பியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரே சொன்னாராம்!
இந்த விஷயத்தில் தனக்குக் கிடைத்த பாராட்டு பற்றி ட்ரம்ப் கூறுகையில், “போரை நிறுத்துனதுக்காக பாகிஸ்தான் பிரதமரே நேர்ல வந்து என்கிட்ட நன்றி சொன்னாரு. ‘நீங்க மட்டும் அன்னைக்கு வராம இருந்திருந்தா, இன்னைக்கு ஒரு கோடி பேர் உயிரோட இருந்திருக்க மாட்டாங்க’னு அவர் சொன்னப்போதான் நான் செஞ்ச காரியத்தோட முக்கியத்துவம் எனக்கு புரிஞ்சது,” எனத் தன் பாணியில் பெருமிதம் கொண்டார்.

10 மாசம்.. 8 போர்கள்!
உலக அமைதிக்காகத் தான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்பதை விளக்கிய அவர், “சும்மா விளையாட்டு இல்ல, கடந்த 10 மாசத்துல மட்டும் உலகத்துல வெடிக்க இருந்த 8 பெரிய போர்களை நான் முன்ன நின்னு தடுத்து நிறுத்தியிருக்கேன். அமெரிக்காவோட அதிகாரம் என்னங்கிறதை உலகத்துக்கு காட்டியிருக்கேன்,” என அதிரடியாகப் பேசியுள்ளார்.

கிளம்பும் விவாதங்கள்:
ட்ரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு இந்தியத் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான பதில்கள் வரவில்லை என்றாலும், “சும்மா சீன் போடுறாரா? இல்ல நிஜமாவே அணு ஆயுதப் போர் வரைக்கும் போனதா?” என அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் காரசாரமான விவாதம் கிளம்பியுள்ளது.

Leave a Comment