யார் அந்த சார்? என்ற கேள்விக்கு வீரமணி வழக்கில் பதில் கிடைக்குமா? அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் மூடப்பட்ட உண்மைகள் வெளியே வருமா? தோண்ட தோண்ட பூதங்கள் கிளம்புமா? விஜய் அரசு பாலியல் குற்றவாளிகளை விரட்டி விரட்டி வேட்டையாட வேண்டும்..

 

யார் அந்த சார்? என்ற கேள்விக்கு வீரமணி வழக்கில் பதில் கிடைக்குமா? அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் மூடப்பட்ட உண்மைகள் வெளியே வருமா? தோண்ட தோண்ட பூதங்கள் கிளம்புமா? விஜய் அரசு பாலியல் குற்றவாளிகளை விரட்டி விரட்டி வேட்டையாட வேண்டும்.. இதில் சமரசமே இருக்க கூடாது.. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விலங்கிட்டு தெருவில் இழுத்து செல்ல வேண்டும்.. இனிமேல் ஒரு பெண்ணை தொட சமூக விரோதிகளுக்கு பயம் வரனும்.. அந்த பயத்தை விஜய் அரசு காட்டணும்.. பொதுமக்கள் ஆவேசம்..

 

தமிழகத்தில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த காலங்களில் அரங்கேறிய பல்வேறு பாலியல் குற்றங்கள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் தற்போது மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளன. குறிப்பாக, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கும், தற்போதைய வீரமணி வழக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கலாமோ என்ற சம்சயங்கள் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பலமாக எழுந்து வருகின்றன.
அன்று அந்த மாணவி வன்கொடுமைக்கு ஆளானபோது பேசப்பட்ட ‘யார் அந்த சார்’ என்ற மர்மம் முழுமையாக விலகாத நிலையில், அந்தப் பின்னணிக்கும் இந்த வழக்குகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விவாதங்கள் நடந்து வருகின்றன.

அதிமுக, திமுக என மாறி மாறி வந்த ஆட்சிக் காலங்களில் இது போன்ற பல திடுக்கிடும் பாலியல் புகார்கள் மூடி மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மக்களிடையே ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளன. சிறுமி பாலியல் வழக்கில் ஆரம்பத்தில் சாட்சிகள் இல்லை என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியை அல்லது பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறி வழக்கை முடிக்க முயற்சிகள் நடந்ததாகப் பரவலாகப் பேசப்பட்டது.

ஆனால், தற்போதைய புதிய அரசியல் சூழலில் இது போன்ற தேங்கிக் கிடந்த கோப்புகள் ஒவ்வொன்றாகத் தோண்டி எடுக்கப்பட்டு வருவதால், இன்னும் பல புதைக்கப்பட்ட உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணைகளின் ஊடாக மேலும் பல முன்னணி விவிஐபிக்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள் சிக்குவார்கள் என்ற தகவலும் தீயாய் பரவி வருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், முந்தைய காலங்களில் காவல்துறையும் அரசும் இது போன்ற வழக்குகளை எளிதில் திசைதிருப்ப முயன்றதும், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றச் செயல்பட்டதும் ஜனநாயகத்தின் மீது பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய அதிரடி நடவடிக்கைகள் மூலமாவது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ளது. இவ்விரு முக்கிய வழக்குகளின் உண்மையான முகங்கள் வெளிவரும் பட்சத்தில் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் மாற்றங்களும் திருப்பங்களும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக உள்ளன.

Leave a Comment