விஜய்சேதுபதியால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது.. அப்படியிருக்கும்போது சக நடிகர் ஒருவர் முதல்வரானால் பொறாமை இருப்பது இயல்புதானே… விஜய்சேதுபதி நினைச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. விஜய்யை மறைமுகமாக தாக்கினால் விஜய் இமேஜ் உடையும், பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிட்டடிக்கும்.. நமக்கும் வாய்ப்புகள் குவியும்ன்னு நினைச்சாரு.. ஆனால் விர்ச்சுவல் வாரியர்ஸ் மட்டுமல்ல, சாதாரண டிவிகே தொண்டர்களே விஜய்சேதுபதியின் பழைய வீடியோக்களை போட்டு கொத்து புரோட்டா போட்டுட்டாங்க.. இனிமேல் வாய்ப்பில்லை ராஜா…
சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஒரு சாமானியனின் வீடியோ பேட்டி சமூக வலைதளங்களில் பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் அரசியல் மற்றும் சினிமா சார்ந்த பல்வேறு கருத்துக்களைப் பொதுமக்களில் ஒருவர் மிக ஆவேசமாகப் பகிர்ந்துள்ளார். விஜய் அரசியலில் வெற்றி பெற்ற பிறகு சிலருக்கு வயிறெரிச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் செல்லும் இடங்களிலெல்லாம் கூடும் கூட்டத்தைப் பார்த்து தாங்கள் எதையோ மிஸ் செய்துவிட்டதாக மற்றவர்கள் நினைப்பதாகவும் அந்த நபர் குற்றம்சாட்டியுள்ளார்.
குறிப்பாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியது குறித்துப் பேசும்போது, அது டி.வி ஷோவின் ரேட்டிங்கை ஏற்றுவதற்காக வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட சர்ச்சையாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தவிர்ப்பது நல்லது என்றாலும், சம்பந்தப்பட்ட நபரின் பாடி லாங்குவேஜ் எதை உணர்த்துகிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்று அவர் வாதிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், ஒருவரின் உடல் தோற்றத்தைக் கிண்டல் செய்யும் விதமாகப் பொதுவெளியில் பேசுவது நாகரிகமற்ற செயல் என்பதைச் சுட்டிக்காட்ட ஒரு உதாரணத்தைக் கூறினார். தலையில் முடி இல்லாத ஒருவரைப் பார்த்து நேரடியாகப் பெயர் சொல்லி அழைப்பது முறையற்றது போல, ஒருவரின் தனிப்பட்ட தன்மையை விமரிசிப்பதும் நாகரிகக் குறைவாகும் என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி குறித்தும் அவர் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுவரை விஜய் சேதுபதி எதாவது ஒரு இடத்தில் லீடர்ஷிப் குறித்து பேசியதுண்டா? அல்லது பல்கலைக்கழகங்களில் பேசியதுண்டா என்று கேள்வி எழுப்பிய அவர், லீடர்ஷிப் என்றால் என்னவென்றே அவருக்கு தான் தெரியவில்லை என்று சாடியுள்ளார். தனக்கு 100 பேரைக் கொடுத்துவிட்டு விஜய் சேதுபதிக்கும் 100 பேரைக் கொடுத்தால், யார் சிறப்பாக வழிநடத்துகிறார்கள் என்பதைத் தான் நிரூபிக்கத் தயார் என்றும் அவர் சவால் விட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தங்களை முன்னிறுத்தாமல் மற்றவர்களைப் ப்ராக்ஸியாக வைத்துக்கொண்டு கேள்வி கேட்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அப்படிப்பட்ட கருத்துக்கள் யாருடைய தூண்டுதலின் பெயரில் கேட்கப்படுகின்றன என்பது தங்களுக்குத் தெரியும் என்றும், பின்னர் தாங்கள் அப்படி அர்த்தத்தில் பேசவில்லை என்று சமாளிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகளைத் தொலைக்காட்சி சேனல்கள் ஏன் ஒளிபரப்ப வேண்டும், எடிட் செய்து நீக்கியிருக்கலாமே என்றும் அவர் கோபமாக வினவியுள்ளார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுவதால் மட்டுமே யாரும் உடனே முதலமைச்சராகவோ அல்லது கவுன்சிலராகவோ மாறிவிட முடியாது என்று கூறி, அரசியல் மற்றும் ஊடக விவாதங்களை அவர் முழுக் கோணத்தில் விமர்சித்து முடித்துள்ளார்.